நடப்பு ஐபிஎல் தொடரின் 55 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மொஹாலியில் மோதவிருக்கின்றன. இதற்கு முன்னர், இந்த மைதானத்தில் இவ்விரு அணிகளும் ஐந்து முறை மோதியுள்ளனர். அவற்றில், மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இரண்டு முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மறுமுனையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. எனவே, இவ்விரு அணிகளும் மோதிய இந்த மைதானத்தில் படைக்கப்பட்ட சாதனைகளை இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
பேட்டிங் சாதனைகள்:
240 / 5 - 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை குவித்தது. இதுவே, இம்மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.
130 / 7 - 2015இல் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை குவித்தது. இதுவே, மைதானத்தில் பதிவான குறைந்தபட்ச ஸ்கோராகும்.
203 - சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஹஸ்ஸி 203 ரன்கள் குவித்து இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2 - இம்மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் பஞ்சாப் அணி சார்பாகவும் சென்னை அணி சார்பாகவும் தலா ஒவ்வொரு சதம் அடிக்கப்பட்டுள்ளது.
9 - இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகளில் 9 அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
63 - இம்மைதானத்தில் சென்னை பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் 63 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
11 - சென்னை வீரர் மைக் ஹஸ்ஸி 11 சிக்சர்களை அடித்து அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
19 - மைக் ஹஸ்ஸி மற்றும் பால் வல்த்தாட்டி ஆகியோர் தலா 19 பவுண்டரிகளை அடித்து முன்னிலை வகிக்கின்றனர்.
பவுலிங் சாதனைகள் :
5 - சென்னை அணியின் வீரர் பிராவோ, மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் 5 விக்கெட்களை கைப்பற்றியதே அதிக விக்கெட்களை கைப்பற்றிய சாதனை ஆகும்.
3 / 27 - 2013இல் நடைபெற்ற போட்டியில் பிராவோ 27 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இதுவே, இம்மைதானத்தின் சிறந்த பந்து வீச்சாகும்.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 5 வீரர்களைத் தமது விக்கெட் கீப்பிங்கில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதுவே, சிறந்த விக்கெட் கீப்பிங் சாதனையாகும்.
பீல்டிங் சாதனைகள்:
சென்னை அணியின் பிராவோ நான்கு கேட்ச்களை பிடித்து மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிறந்த பீல்டிங் சாதனையை பதிவு செய்துள்ளார்.