அடுத்த ஐபிஎல் சீசனில் மீண்டும் தோனி நிச்சயம் விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன். இதோடு மட்டுமல்லாமல், ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி எப்படி பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக இருக்கிறது என்பதைப் பற்றியும் விளக்கமளித்துள்ளார், விசுவநாதன். 2019 ஐபிஎல் சீசனில் இறுதிப் போட்டியில்சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது முறையாக பட்டம் வென்றது, மும்பை இந்தியன்ஸ். ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியான சென்னை மீண்டும் ஒரு முறை கோப்பையை வெல்வதற்கு தவறியது.
ஆட்டம் முடிந்த பிறகு அடுத்த சீசனில் தொடர்ந்து விளையாடுவீர்களா என கேள்வி எழுப்பிய போது நிச்சயமாக விளையாடுவேன் என்று பதிலளித்தார், தோனி. இந்தக் கூற்று டோனி ஓய்வை பெற உள்ளாரா என்பதை பற்றிய பல கேள்விகளை எழுப்பியது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விசுவநாதனிடம் பிரத்தியேக பேட்டி ஒன்றை எடுத்தது.
"அடுத்த சீசனில் டோனி நிச்சயம் விளையாடுவார் என தெளிவாக கூறினார், காசி விஸ்வநாதன். அவர் மீண்டும் திரும்புவார் என நம்பிக்கையில் உள்ளோம். கடந்த இரு ஆண்டுகளாக இவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்றால் பேச்சுகள் அடிபட்டன. ஆனால், கடந்த இரு ஆண்டுகளிலும் இவர் அருமையாக செயல்பட்டு அனைத்து கேள்விகளுக்கும் தமது பேட்டிங் மூலம் பதில் அளித்துள்ளார். கடந்த சீசனில் அற்புதமாக செயல்பட்டு உள்ளார். இதையே உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தொடர்ந்து அளிக்கும் முனைப்பில் களமிறங்கவுள்ளார். நிச்சயம் அவர் மீண்டும் திரும்பி வருவார்".
சூதாட்ட பிரச்சனையில் சிக்கிய சென்னை அணி இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், எப்படி தொடர்ந்து வெற்றிகரமான அணியாக ஐபிஎல் வரலாற்றில் இருந்து வருகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அவற்றிற்கு பதிலளிக்கும் வகையில், "அணியினர் அனைவரும் சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கெடுத்து குறைந்தது ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றனர். பிளே ஆஃப் சுற்றுக்கு நாங்கள் தகுதி பெறுவதற்கு அதிக காரணமாக மேற்கூறியவை விளைவித்தது" என்று கூறினார்.
உலக கோப்பை தொடரில் தோனி விளையாட உள்ளார். மேலும், இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இவர் பயன்படுவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த முறை உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். தற்போது ஒரு வீரனாக தோனி பங்கேற்க உள்ளார். இருப்பினும், இவரது அனுபவம் மற்றும் திறம்பட யோசிக்கும் முடிவுகள் இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்றும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.