ஐபிஎல் பிளே ஆப் சுற்றுகள்: முதலாவது தகுதி சுற்று 

Qualifier 1
Qualifier 1

2019 ஐபிஎல் தொடரின் முதலாவது பிளே ஆப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதவிருக்கின்றன. 2015ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இவ்விரு அணிகளும் முதலாவது தகுதி சுற்றில் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன. ஏற்கனவே, 2013 மற்றும் 2015 ஆண்டுகளில் நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றில் இரு முறை மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்துள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலாவது தகுதி சுற்றில் மும்பை அணியை தோற்கடிக்கும் முனைப்பில் களமிறங்கவுள்ளது, சென்னை அணி.

2011ஆம் ஆண்டு முதல் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முதலாவது தகுதி சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் மோதும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த ஆட்டத்தில் தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பாக இரண்டாவது தகுதிச்சுற்று உள்ளது. அதன்படி,இரண்டாவது தகுதி சுற்றில் வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் முதலாவது தகுதி சுற்றில் தோற்கும் அணி மோத வேண்டும். இதுவரை நான்கு முறை முதலாவது தகுதி சுற்று போட்டியில் சென்னை அணி விளையாடி உள்ளது. அதில் மூன்று முறை வெற்றியும் கண்டுள்ளது. 2011ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் முதலாவது தகுதி சுற்றில் 8 போட்டிகள் நடைபெற்று உள்ளன. அவற்றில், ஐந்து போட்டிகளில் வென்ற அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

எனவே, முதலாவது தகுதி சுற்றில் இதுநாள்வரை படைக்கப்பட்ட சாதனைகளை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.

#1.பேட்டிங் சாதனைகள்:

Suresh Raina is the leading run scorer in Qualifier 1 (picture courtesy: BCCI/iplt20.com)
Suresh Raina is the leading run scorer in Qualifier 1 (picture courtesy: BCCI/iplt20.com)

192 / 1 - 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதலாவது தகுதி சுற்றில் மும்பை அணியை எதிர்த்து ஆடிய சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இதுவே, அதிகபட்ச ஸ்கோராக இந்நாள் வரை உள்ளது.

135 / 8 - 2014-இல் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்ததே குறைந்தபட்ச ஸ்கோர் ஆக உள்ளது.

203 - இதுவரை நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளில், சுரேஷ் ரெய்னா 203 ரன்கள் குவித்து அதிக ரன்களைக் குவித்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்

23 - 2013ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வீரர் மைக்கேல் ஹசி 83 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்ததே தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.

12 - முதல் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இதுவரை 12 அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

2 - சுரேஷ் ரெய்னா மற்றும் வெய்ன் ஸ்மித் ஆகியோர் தலா இரு அரைச்சதங்களை அடித்துள்ளனர். வேறு எந்த வீரரும் ஒரு அரை சதத்தை கூட தாண்டவில்லை.

113 - முதலாவது தகுதி சுற்று போட்டிகளில் இதுவரை 113 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன.

13 - சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா இதுவரை 13 சிக்சர்களை அடித்துள்ளார். இது தனிநபர் அதிகபட்ச சிக்சர்கள் ஆகும்.

13 - முதலாவது தகுதி சுற்று போட்டிகளில் அதிக பவுண்டரிகளை அடித்து வீரராக மீண்டும் ஒரு முறை முன்னிலை வகிக்கிறார், சுரேஷ் ரெய்னா.

பவுலிங் சாதனைகள்:

bravo
bravo

9 - சென்னை அணி வீரர் வெய்ன் பிராவோ 9 விக்கெட்களை இந்த முதலாவது தகுதிச்சுற்று போட்டிகளில் வீழ்த்தியுள்ளார். இது தனி நபர் அதிகபட்ச பந்துவீச்சு சாதனையாகும்.

4 / 14 - 2016இல் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியின் பந்துவீச்சாளர் தவால் குல்கர்னி 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சு சாதனையாகும்.

விக்கெட் கீப்பிங் சாதனைகள்:

2012ஆம் ஆண்டு நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் பிரண்டன் மெக்கல்லம் 4 வீரர்களை தமது விக்கெட் கீப்பிங்கால் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது சிறந்த விக்கெட் கீப்பிங் சாதனையாகும்.

பீல்டிங் சாதனைகள்:

சென்னை அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா நான்கு கேட்ச்களை பிடித்து உள்ளனர். இது சிறந்த ஃபீல்டிங் சாதனையாக பதிவாகியுள்ளது.

Quick Links

Edited by Fambeat Tamil