#4) கிறிஸ் கெயில் ( 2011 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்றார் )
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயில். இவர் ஐபிஎல் தொடரின் அதிரடிக்கு பெயர் போன மிக முக்கியமான வீரர்களில் ஒருவர். ஐபிஎல் தொடரில் வெறும் 30 பந்துகளில் சதம் விளாசிய ஒரே வீரர் இவர்தான். அதுமட்டுமின்றி ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார். இவர் ஒரே போட்டியில் 17 சிக்சர்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். அந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 12 போட்டிகளில் விளையாடிய இவர் 608 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் விருதினை பெற்றார்.
#5) கிறிஸ் கெயில் ( 2012ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்றார் )
இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருப்பவர், 2011ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்ற கிறிஸ் கெயில் தான். இவர் தொடர்ச்சியாக இரண்டு வருடம் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2012 ஆம் ஆண்டும் பெங்களூர் அணிக்காக தான் விளையாடினார் கிறிஸ் கெயில். அந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் 15 போட்டிகளில் விளையாடிய இவர் 733 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#6) மைக்கேல் ஹசி ( 2013ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்றார் )
இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருப்பவர் மைக்கேல் ஹசி. ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர். 2013ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடியவர் இவர்தான். 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் 17 போட்டிகளில் விளையாடிய இவர் 733 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.