சர்வதேச கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்கள், பெரும்பாலும் அதிகம் விரும்புவது பேட்ஸ்மேன்களின் அதிரடியை தான். எனவே தான் டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிகளை விட டி-20 போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிகமாக வருகை தருகின்றனர். ஏனென்றால் டி-20 போட்டி என்றாலே பேட்ஸ்மேன்கள் அனைவரும் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆட ஆரம்பித்து விடுகின்றனர்.
இவ்வாறு அதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் தொடரை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் வருடம் தோறும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். அந்த 8 அணிகளில் மிக ஆபத்தான அணிகள் இரண்டு உள்ளது. அந்த அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#2) சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நம் தமிழ் நாட்டிற்காக விளையாடுகிறது. அதற்காகவே பல கிரிக்கெட் ரசிகர்கள் நம் தமிழ் நாட்டிற்காக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆதரவளித்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக தோனிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுவதற்கு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.
ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதால், அவர்களுக்கு கிரிக்கெட் வாரியம் இரண்டு வருடம் விளையாட தடை விதித்தது. அதன் பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து ஐபிஎல் தொடரில் வந்தது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளை வென்ற அணிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது இடத்தில் உள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் மிக ஆபத்தான அணிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது சென்னை அணி.
#1) மும்பை இந்தியன்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிகராக அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி தான். அதுமட்டுமின்றி கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியதால், அவரது ரசிகர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆதரவளித்து வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகிய இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த வீரர் ரெய்னா. அதுமட்டுமின்றி இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கண்ட ஒரே அணி என்றால், அது மும்பை இந்தியன்ஸ் அணி தான். எனவே மும்பை இந்தியன்ஸ் அணி மிக ஆபத்தான அணியாக கருதப்படுகிறது.