ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட ஏலத்தில் விடப்படாத ஒரு வீரரை பற்றி இங்கு தெரிந்துகொள்ள உள்ளோம்.
ஐபிஎல் என்ற பிரபலமான தொடர் நமது இந்தியாவில் கடந்த 11 வருடங்களாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து வீரர்களும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். ஐபிஎல் தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணியிலும் 7 இந்திய வீரர்களையும், மற்ற 4 வீரர்களுக்கு பதிலாக வெளிநாட்டு வீரர்களையும் ஏலத்தில் எடுத்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு அணியிலும் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் சரியாக விளையாடவில்லை எனில், அடுத்த ஆண்டின் ஏலத்தில் அந்த வீரர்களை அணியிலிருந்து வெளியே அனுப்பி மறு ஏலத்தில் விடலாம்.
இவ்வாறு பல அணிகள் தங்கள் அணியில் எடுக்கப்பட்டுள்ள வீரர்களை ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தில் வெளியே விட்டுள்ளனர். எனவே சிறப்பாக விளையாடினால் மட்டுமே அணியில் நிரந்தர இடம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரே அணியில் 11 ஆண்டுகளாக நிரந்தரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார், நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
விராட் கோலி என்றாலே அனைத்து நாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போதைய கிரிக்கெட் உலகின் நம்பர்-1 பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் இவர், இந்திய அணிக்கு கேப்டனாக மாறிய பின்பு பல சாதனைகளை கிரிக்கெட் வரலாற்றில் படைத்து வருகிறார். அதுமட்டுமின்றி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள பல ஜாம்பவான்களின் சாதனைகளையும் ஒவ்வொன்றாக தற்போது முறியடித்து கொண்டு வருகிறார் விராட் கோலி.
அதுவும் குறிப்பாக யாருமே முறியடிக்க முடியாது என்று நினைத்த சச்சினின் சாதனையை தற்போது விராட் கோலி நெருங்கிக் கொண்டு வருகிறார். அந்த சாதனை என்னவென்றால், சதத்தில் சதம் அடித்த சச்சினின் சாதனை தான். மேலும் சேஸிங்கில் அதிக சதம் அடித்த ஒரே இந்தியர் என்ற சாதனையையும் கோலி தன் வசம் வைத்துள்ளார்.
இவ்வாறு தற்போதைய கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும், சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும் திகழ்கிறார் கோலி. அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டியின் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரானது கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏலம் எடுக்கப்படும் பொழுது, 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இருந்து ஒரு வீரரை எடுக்க வேண்டும் என்பது விதிமுறை.
எனவே 2008ஆம் ஆண்டு ஏலம் எடுக்கப்படும் பொழுது, அப்போதைய 19 வயதிற்குட்பட்டோருக்கானஅணியின் சிறந்த வீரரான விராட் கோலியை, பெங்களூரு ராயல் சேலஞர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இது வரை ஒரு முறை கூட விராட் கோலி ஏலத்தில் விடப்பட்டது இல்லை.
தொடர்ந்து 11 வருடங்களாக பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இதுவரை பெங்களூர் அணிக்காக 155 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் குவித்த மொத்த ரன்கள் 4948 ஆகும். இவர் இதுவரை 4 சதங்களும், 34 அரைச்சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.