ஐபிஎல் 2019: புதிய ஆடையை அறிமுகப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் அணி
மும்பை இந்தியன்ஸ் அணி

12வது ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் மாதம் இந்தியாவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் முதற்கட்டமாக நடக்கவுள்ள போட்டிகளின் கால அட்டவணை சென்ற வாரம் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் வெளியிடப்பட்டது. அனைத்து அணிகளும் இப்போதே அதற்கான தயாரிப்பில் இறங்கி விட்டனர். இன்று மும்பை இந்தியன்ஸ் அணி அவர்கள் பயன்படுத்தப்போகும் புது ஆடையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த முறையும் இந்திய தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா அவர்களே அணியை வழிநடத்துவார் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு அணிகளை தொடர்ந்து ரசிகர்களை அதிகம் கவர்ந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சச்சின் அவர்கள் ஆரம்பத்தில் இந்த அணிக்காக விளையாடியதாக கூட இருக்கலாம். தற்போதும் சச்சின் மும்பை இந்தியன்ஸ் அணியின் வழிகாட்டியாக இருந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இது இளம் வீரர்களுக்கு புது தெம்பையும், புத்துணர்ச்சியும் கொடுக்கும்.

மற்ற அணிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை இவர்கள். இதுவரை 3 முறை (2013, 2015 மற்றும் 2017) ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள மும்பை அணி இம்முறையும் அதற்கான தீவிர முயற்சியில் இறங்கும். இதைத்தாண்டி 2 முறை (2011 மற்றும் 2013) சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்றுள்ளது. சிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் என சரிசமமான நிலையில் இருக்கிறது. வேகத்தில் மிரட்ட லசித் மலிங்கா, ஆடம் மில்னே மற்றும் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் உள்ளனர். இவர்களுக்கு பௌலிங்கில் ஒத்துழைக்க பாண்டிய சகோதரர்கள் மற்றும் பொல்லார்ட் ஆகியோர் உள்ளனர். இவர்கள் பின் வரிசையில் இறங்கி அணிக்கு ரன் சேர்க்கவும் உதவக்கூடியவர்கள்.

எல்லா வருடமும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு சில அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒன்று. இம்முறை சிக்ஸர் நாயகன் யுவ்ராஜ் சிங்கும் மும்பை அணியில் இணைந்துள்ளது இவர்களுக்கு கூடுதல் பலம். பேட்டிங், பீல்டிங், பந்து வீச்சு என அனைத்து துறையிலும் சிறப்பாக உள்ள மும்பை, இம்முறை கோப்பையை வெல்லக்கூடிய அணியாக கணிக்கப்பட்டுள்ளது. இன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஏற்பாடு செய்த புதிய ஆடை அறிமுக விழாவில் பேசிய ரோஹித் ஷர்மா "நாங்கள் ஒரு குழுவாக சிறப்பான அணியாக உள்ளோம். முதல் வாரத்தில் இரண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறோம். இம்முறை கோப்பையை வெல்ல ஒரு சில புது வியூகங்களை வகுத்துள்ளோம்" என கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்: ரோஹித் ஷர்மா(கேப்டன்), ஹார்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ராஹ், க்ருனால் பாண்டியா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், மயங் மார்கண்டே, ராகுல் சஹார், அனுகுல் ராய். சித்தேஷ் லட், ஆதித்யா தாரே, பொல்லார்ட், ஏவின் லெவிஸ், பென் கட்டிங், மிட்செல் மெக்லெனகான், ஆடம் மில்னே, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், பரேந்தர் சிங் ஸ்ரான், லசித் மலிங்கா, யுவராஜ் சிங், அன்மோல்பிரீத் சிங், பங்கஜ் ஜஸ்வால், ரசிகர் தார், குவின்டன் டி காக் மற்றும் ஜெயந்த் யாதவ்.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now