ஐபிஎல் 2019: ஒவ்வொரு அணியிலும் பவர்பிலேவில் பந்துவீச சரியான வீரர்கள்

பும்ராஹ்
பும்ராஹ்

ஐபிஎல் 2019 தொடங்க இன்னும் 3 வாரத்திற்கும் குறைவாகவே உள்ளது. இத்தொடரின் முதல் இரண்டு வாரத்திற்கான அட்டவணை வெளியாகி உள்ளது. இதன் படி தொடரின் முதல் போட்டி சென்ற ஆண்டின் சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் வருகிற 23ம் தேதி சென்னை சேப்பாக்கில் நடைபெற உள்ளது. இதற்கான அணிகள் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் முடிவு செய்யப்பட்டது.

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பவர்ப்பிலே மிக முக்கியமானது. முதல் 6 ஓவர்களில் இரண்டே பீல்டர்கள் தான் வட்டத்துக்கு வெளியில் இருப்பார்கள். ஆதலால் பேட்ஸ்மேன்கள் முடிந்த வரை அடித்து ஆடி ரன்கள் சேர்த்துக்கொள்வர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக துல்லியமாக பந்து வீசும் வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இரண்டு அல்லது மூன்று பந்து வீச்சாளர்கள் இருப்பர். அவ்வாறு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் பவர்ப்பிலேவில் பந்துவீச தகுதியான வீரர்களை பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.

#8 டெல்லி கேபிட்டல்ஸ்

கிறிஸ் மோரிஸ்
கிறிஸ் மோரிஸ்

இத்தொடரில் சிறந்த பேட்டிங் வரிசை கொண்ட அணியாக உள்ளது டெல்லி கேபிட்டல்ஸ். சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வருடம் ஏலத்தின் மூலம் சிறந்த அனுபவம் வாய்ந்த வீரர்களை தங்கள் வசம் ஆக்கினர். அதில் ஒருவர் தான் அக்ஸர் படேல் மற்றும் இஷாந்த் சர்மா. அனுபவமிக்க இருவரும் ரபாடா மற்றும் போல்ட் உடன் பவர்ப்பிலேவில் எதிரணிக்கு நெருக்கடி தரக்கூடியவர்கள்.

இவர்களை தாண்டி அவேஷ் கான், கிறிஸ் மோரிஸ் மற்றும் லாமிச்சனே ஆகியோரும் உள்ளனர். இம்முறை புதிய அணியாக காட்சி அளிக்கும் டெல்லி அணி, பிலே ஆப் சுற்றுக்கு முன்னேற முயற்சிக்கும்.

#7 ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜோப்ரா ஆர்ச்சர்
ஜோப்ரா ஆர்ச்சர்

சென்ற ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் மிக குறைந்த விலையில் சிறப்பான வீரர்களை ஏலம் எடுத்த அணி ராஜஸ்தான். வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் உள்ள ராஜஸ்தான் அணி, இளம் வீரர்களை அதிகம் கொண்டுள்ளது. தாமஸ், ஆரோன், உனட்கட் மற்றும் இங்கிலாந்தின் ஆர்ச்சர் ஆகியோர் வேகம் மற்றும் ஸ்லோவெர் பந்துகள் வீசுவதில் வல்லவர்கள். சென்ற ஆண்டு இந்த அணியின் கௌதமும் ஓரிரு ஓவர்கள் பவர்ப்பிலேவில் பந்து வீசினார். இவர்கள் இல்லாமல் பென் ஸ்டோக்ஸும் கூடுதல் பந்துவீச்சாளராக உள்ளார்.

#6 கிங்ஸ் XI பஞ்சாப்

ஷமி
ஷமி

பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் இந்த ஆண்டு பந்துவீச்சில் மிக சிறப்பான அணியாக உள்ளது. மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, ஷமி, குர்ரான் ஆகிய வீரர்கள் இம்முறை கூடுதல் வழு சேர்த்துள்ளனர். ஷமி இந்திய அணிக்கு சிறப்பாக பந்து வீசி வருவதால் பவர்ப்பிலேக்கான முதல் வீரராக இவரை பயன்படுத்தலாம். சென்ற ஆண்டை பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் முதல் 6 ஓவரில் 2 ஓவர்கள் வீசினார். இவர்கள் இல்லாமல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ டையும் இருக்கிறார்.

#5 சன் ரைசர்ஸ் ஹைதெராபாத்

புவனேஸ்வர் குமார்
புவனேஸ்வர் குமார்

கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாகவே சிறந்த பந்து வீச்சாளர்களை கொண்ட அணியாக உள்ளது சன் ரைசர்ஸ் ஹைதெராபாத். எவ்வளவு குறைவான ஸ்கோர் ஆனாலும் அதை தற்காத்துக்கொள்ளும் அளவுக்கு பந்துவீச்சு திறமை உள்ள அணியாக சிறந்து விளங்குகிறது. சென்ற ஆண்டு பவர்ப்பிலேவில் முதல் ஓவரை பெரும்பாலும் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் அவர்களே வீசினார். இவருக்கு பக்க பலமாக சந்தீப், சித்தார்த் கவுல், கலீல் அஹ்மத் ஆகியோரும் உள்ளனர்.

#4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஆண்ட்ரே ரசல்
ஆண்ட்ரே ரசல்

2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் அனுபவம் குறைவான பந்து வீச்சாளர்களை கொண்ட அணியாக உள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். சிவம் மாவி, நாகர்கோடி மற்றும் ப்ரசித் கிருஷ்ணாவை தவிர இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை. இவர்களும் அனுபவம் மிக குறைவானவர்களே. லோக்கி பெர்குசன் மட்டுமே சர்வதேச அளவில் பெரிய வேகப்பந்து வீச்சாளராக அனுபவம் வாய்ந்தவராக உள்ளார். இவருக்கு துணையாக ரசலும், பியுஷ் சாவ்லாவும் உள்ளனர். தேவைப்பட்டால் சுனில் நரேன் ஓரிரு ஓவர்கள் பந்து வீசுவார்.

#3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

உமேஷ் யாதவ்
உமேஷ் யாதவ்

பெங்களூரு அணியை பொறுத்தவரை சென்ற ஆண்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மிகச்சிறப்பாக பவர்ப்பிலேவில் பந்து வீசினார். ஆஸ்திரேலியாவின் நாதன் கோல்ட்டர் நைல் மற்றும் இந்தியாவின் சிராஜ் ஆகியோர் யாதவுக்கு பக்க பலமாக இருக்க கூடும். இவர்கள் இல்லாமல் இந்திய இளம் வீரரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும் அணியில் உள்ளார். சென்ற ஆண்டு பெங்களூரு அணிக்காக ஓரிரு போட்டியில் பவர்ப்பிலேவில் பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டும் எடுத்தார். மிடில் ஓவருக்கு சாஹல் மற்றும் ஸ்டானிஸ் உள்ளனர்.

#2 மும்பை இந்தியன்ஸ்

பும்ராஹ்
பும்ராஹ்

மும்பை அணிக்கு இந்திய வேகப்பந்து சூறாவளி பும்ராஹ் முதல் ஓவரை வீச அதிகம் வாய்ப்புள்ளது. தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக கருதப்படும் இவர், மும்பை அணிக்கு பவர்ப்பிலேவில் திருப்பு முனையாக இருப்பார். இவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் மற்றும் மிட்செல் மெக்லெனகான் ஆகியோர் உள்ளனர். இந்திய அணியை சேர்ந்த பரிந்தர் ஸ்ரனும் பவர்ப்பிலேவில் பந்து வீச கூடியவரே. தேவைப்பட்டால் பாண்டியா சகோதரர்கள் மற்றும் மார்கண்டே ஓரிரு ஓவர்கள் வீசக்கூடும்.

#1 சென்னை சூப்பர் கிங்ஸ்

தீபக் சாஹர்
தீபக் சாஹர்

நடப்பு சாம்பியன் ஆன சென்னை அணியை பொறுத்தவரையில் இளம் மற்றும் அனுபவம் கலந்த வீரர்களை கொண்டுள்ளது. மோஹித் சர்மா மீண்டும் சென்னை அணிக்கு திரும்பி உள்ளதால் இவருடன் சேர்ந்து சாஹர் பந்த வீச வாய்ப்புள்ளது. ஷார்துல் தாகூர் மற்றும் லுங்கி நஜிடி ஆகியோரும் பவர்ப்பிலேவில் பந்துவீச தகுதியானவர்களே. ஆனால் தோனி யாரும் எதிர்பாக்காத வீதமாக சான்ட்னரை பயன் படுத்தினால் ஆச்சரியம் இல்லை.