#4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் அனுபவம் குறைவான பந்து வீச்சாளர்களை கொண்ட அணியாக உள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். சிவம் மாவி, நாகர்கோடி மற்றும் ப்ரசித் கிருஷ்ணாவை தவிர இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை. இவர்களும் அனுபவம் மிக குறைவானவர்களே. லோக்கி பெர்குசன் மட்டுமே சர்வதேச அளவில் பெரிய வேகப்பந்து வீச்சாளராக அனுபவம் வாய்ந்தவராக உள்ளார். இவருக்கு துணையாக ரசலும், பியுஷ் சாவ்லாவும் உள்ளனர். தேவைப்பட்டால் சுனில் நரேன் ஓரிரு ஓவர்கள் பந்து வீசுவார்.
#3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
பெங்களூரு அணியை பொறுத்தவரை சென்ற ஆண்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மிகச்சிறப்பாக பவர்ப்பிலேவில் பந்து வீசினார். ஆஸ்திரேலியாவின் நாதன் கோல்ட்டர் நைல் மற்றும் இந்தியாவின் சிராஜ் ஆகியோர் யாதவுக்கு பக்க பலமாக இருக்க கூடும். இவர்கள் இல்லாமல் இந்திய இளம் வீரரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும் அணியில் உள்ளார். சென்ற ஆண்டு பெங்களூரு அணிக்காக ஓரிரு போட்டியில் பவர்ப்பிலேவில் பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டும் எடுத்தார். மிடில் ஓவருக்கு சாஹல் மற்றும் ஸ்டானிஸ் உள்ளனர்.
#2 மும்பை இந்தியன்ஸ்
மும்பை அணிக்கு இந்திய வேகப்பந்து சூறாவளி பும்ராஹ் முதல் ஓவரை வீச அதிகம் வாய்ப்புள்ளது. தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக கருதப்படும் இவர், மும்பை அணிக்கு பவர்ப்பிலேவில் திருப்பு முனையாக இருப்பார். இவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் மற்றும் மிட்செல் மெக்லெனகான் ஆகியோர் உள்ளனர். இந்திய அணியை சேர்ந்த பரிந்தர் ஸ்ரனும் பவர்ப்பிலேவில் பந்து வீச கூடியவரே. தேவைப்பட்டால் பாண்டியா சகோதரர்கள் மற்றும் மார்கண்டே ஓரிரு ஓவர்கள் வீசக்கூடும்.
#1 சென்னை சூப்பர் கிங்ஸ்
நடப்பு சாம்பியன் ஆன சென்னை அணியை பொறுத்தவரையில் இளம் மற்றும் அனுபவம் கலந்த வீரர்களை கொண்டுள்ளது. மோஹித் சர்மா மீண்டும் சென்னை அணிக்கு திரும்பி உள்ளதால் இவருடன் சேர்ந்து சாஹர் பந்த வீச வாய்ப்புள்ளது. ஷார்துல் தாகூர் மற்றும் லுங்கி நஜிடி ஆகியோரும் பவர்ப்பிலேவில் பந்துவீச தகுதியானவர்களே. ஆனால் தோனி யாரும் எதிர்பாக்காத வீதமாக சான்ட்னரை பயன் படுத்தினால் ஆச்சரியம் இல்லை.