இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் ஒரே ஒரு ஒருநாள் போட்டி இன்று டப்ளினில் நடைபெற உள்ளது. 2013 மற்றும் 2015-ம் ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக இங்கிலாந்து அணி இந்த மைதானத்தில் விளையாடவுள்ளது. அயர்லாந்து அணியினருக்கு சொந்த மைதானமாக இருந்தாலும் இதுவரை நடைபெற்றுள்ள 13 போட்டிகளில் இரண்டில் மட்டுமே அயர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த இறுதி வெற்றி கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகளில் பெற்றவைகளாகும். இதுவரை இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் 7 முறை ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து அணி ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து அணி ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக அயர்லாந்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகளிலுமே அயர்லாந்து அணி தோல்வியுற்றுள்ளது. எனவே, இன்றைய போட்டியிலாவது அயர்லாந்து அணி வெற்றி பெற வேண்டிய முனைப்பில் களமிறங்க உள்ளது, அயர்லாந்து அணி.
இங்கிலாந்து அணி:
இன்றைய போட்டியில் உலக கோப்பை தொடர் நடைபெறுவதை முன்னிட்டு முக்கிய வீரர்களான ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் களம் இறங்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய பேட்ஸ்மேன்கள் - ஜோ ரூட், இயான் மோர்கன் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ்:
ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் முன்னிலையில் உள்ள இயான் மோர்கன் மற்றும் ஜோ ரூட் இன்றைய போட்டியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் புதிதாக இணைந்துள்ள ஜேம்ஸ் வின்ஸ் சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இவரின் பங்களிப்பு நிச்சயம் இன்று இருக்கும் எனவும் நம்பலாம்.
முக்கிய பந்துவீச்சாளர்கள் - அடில் ரஷித் மற்றும் சோப்ரா ஆர்ச்சர் :
சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் சுழற்பந்து வீச்சாளரான அடில் ரஷித் இன்றும் தனது தாக்குதலை அளிப்பார் என நம்பலாம். இன்றைய போட்டியில் அறிமுகமாக உள்ள சோப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான பார்மில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
இயான் மோர்கன், ஜோ ரூட், ஜோ டென்லி பெண் ஃபோக்ஸ், டேவிட் வில்லி, சோப்ரா ஆச்சர், அடில் ரஷித், லியாம் பிளங்கெட், ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் பெண் டக்கெட்.
அயர்லாந்து அணி:
இன்றைய போட்டி தங்களது சொந்த மைதானத்தில் நடைபெற இருப்பதால் இங்கிலாந்து அணியினரை கூடுதல் நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது, அயர்லாந்து அணி.
முக்கிய பேட்ஸ்மேன்கள் - பால் ஸ்டெர்லிங், வில்லியம் போர்ட்டர் பீல்ட் மற்றும் கெவின் ஓ பிரையன்:
மேற்கண்ட மூன்று பேட்ஸ்மேன்களும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பங்காற்றி வரும் வீரர்கள் ஆவர்.மேலும், இவர்களது பேட்டிங்கை இந்த அணி பெரிதும் நம்பியுள்ளது. அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள காரி வில்சன் தங்களது அணியின் பேட்டிங்கிற்கு கூடுதல் பலம் சேர்ப்பார்.
முக்கிய பந்துவீச்சாளர்கள் - ரேங்கைன், ஜார்ஜ் டக்ரெல் மற்றும் பாரி மெக்கார்த்தி:
அயர்லாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை எடுத்த வீரரான ஜார்ஜ் டக்ரெல் இந்த அணியின் பந்துவீச்சின் முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறார். எனவே, மற்ற இரு பந்துவீச்சாளர்கள் உடன் இணைந்து தனது சிறப்பான தாக்குதல்களை இன்றைய போட்டியில் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
வில்லியம் போர்ட்டர் பீல்ட், ஆன்டிரூவ் பால்பிரின், லார்கன் டக்கெர், பால் ஸ்டெர்லிங், ஆண்டி கெவின் ஓ பிரையன், வில்சன், ஜார்ஜ் டக்ரெல், பாரி மெக்கார்த்தி, ஸ்டூவர்ட் தாம்சன், டிம் முர்டாக் மற்றும் ரேங்கைன்.