கேள்விக்குறியான குல்திப் யாதவின் ஃபார்ம்

குல்திப் யாதவ்
குல்திப் யாதவ்

உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் சுழற் பந்து வீச்சு குல்திப் யாதவ் தலைமையில் இருக்கும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் அவரின் தற்போதைய ஃபார்ம் இந்திய அணி நிர்வாகத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன் இந்திய அணியின் முதல் சாய்ஷாக உலக கோப்பையில் குல்திப் யாதவ் இருந்தார்.

சாஹல் குல்திப் யாதவ் இடையேயான போட்டி

இடது கை சுழல் பந்து வீச்சாளரான (ஸ்பின்னர்) குல்திப் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளார், தனது சக அணி வீரரான ஸ்பின்-பந்துவீச்சாளர் யூசுவெந்தர் சாஹல் எட்டாம் இடத்தில் உள்ளார். இவர்கள் இருவருக்குமான ரேஸ் புள்ளி பட்டியலில் மட்டுமல்லாமல் இந்திய அணியின் இடம் பெறுவதிலும் தொடர்கிறது. இங்கிலாந்து பிட்சுகள் வேகப் பந்து வீச்சுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் இவ்விருவரில் ஆடும் அணியில் யார் இடம் பெறுவார் என பொருத்திடுந்து பார்ப்போம். இந்தியாவின் முன்னணி ஸ்பின்னர்களாக இவர்கள் இருவரும் 15-ஆவது உலகக் கோப்பையில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுடன் இந்திய அணியில் இடம் பெற்றனர்.

ஐபிஎல் தொடரில் குல்திப் யாதவ்

24 வயதான குல்திப் யாதவ் 44 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 87 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 12 விக்கெட்களையும், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 17 விக்கெட்களையும் சாய்த்துள்ளார். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடர் அவருக்கு சாதகமாக அமையவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இந்த தொடரில் ஒன்பது போட்டிகளில் பங்கேற்று 33 ஓவர்கள் பந்து வீசி நான்கு விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பெங்களுருவிற்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே விழ்த்தினார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அணியில் இடம் பெறவில்லை.

பெங்களுருவிற்கு எதிரான ஆட்டத்தில் குல்திப்
பெங்களுருவிற்கு எதிரான ஆட்டத்தில் குல்திப்

குல்திப், உத்தப்பா போன்ற வீரர்கள் தங்களது பழைய ஃபார்முக்கு திரும்புவதற்க்காக தான் ஒய்வு அளிக்கப்பட்டதாக கொல்கத்தா அணி தலைவர் தினேஷ் கார்த்திக் கூறினார். குல்திப் யாதவ் நாங்கள் எதிர் பார்த்தது போல் பந்து வீசவில்லை. அவருடைய ஃபார்மும் அணியின் பின்னடைவிற்க்கு ஒரு காரணம். கடந்த போட்டியில் சிறிது அழுத்தத்தில் இருந்தார். அதனால் அவருக்கு ஒரு இடைவெளி தேவைப்பட்டது என கூறினார்.

உலக கோப்பை அணியில் இடம்பெறுவாரா?

ஐபிஎல் இருபது ஓவர் போட்டி உலக கோப்பை ஐம்பது ஓவர் போட்டியாக இருந்தாலும் அவரின் மனநிலை மற்றும் இந்த ஐபிஎல் மோசமான ஃபார்ம் உலக கோப்பை போட்டிகளில் இவருக்கான பின்னடைவாக இருக்கும். இவர் உலக கோப்பை ஆடும் லெவனில் இடம் பெறுவாரா என ஜுன் 5 ஆம் தேதி தென் ஆப்ரிக்காவிற்க்கு எதிரான போட்டியில் தெரியும்.

உலக கோப்பை போட்டி ஒரு புறமிருக்க இன்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியில் குல்திப் யாதவ் இடம் பெறுவாரா என பொருத்திருந்து பார்ப்போம்

Quick Links

Edited by Fambeat Tamil