தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பார்வை ஐபிஎல் தொடரிலிருந்து 2019 உலகக் கோப்பை தொடருக்கு படிப்படியாக மாறி வருகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்-ல் தொடங்க இருக்கும் 2019 உலகக் கோப்பை தொடரானது மே 30 அன்று தொடங்க உள்ளது. இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் என்னும் நோக்கில் ரசிகர்களின் பார்வை முழுவதும் இந்திய கிரிக்கெட் அணியின் மீது திரும்பியுள்ளது. அத்துடன் பெரும்பாலன கிரிக்கெட் ரசிகர்களின் விருப்ப அணியாகவும் இந்திய கிரிக்கெட் அணி திகழ்கிறது. இந்திய கிரிக்கெட் அணி சிறந்த அனுபவ வீரர்களை கொண்டு திகழ்கிறது. இந்திய கேப்டன் விராட் கோலிக்கு உலகக் கோப்பையில் உதவியாக இருப்பது தனது கடமை என அனுபவ தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
2019 ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப்-ற்கு தகுதி பெறாமல் தகுதிச் சுற்றுடன் நடையைக் கட்டியதால் விராட் கோலியின் கேப்டன் ஷீப் மீண்டும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பெங்களூரு அணித்தேர்வு குறித்து கடுமையாக வசைபடியுள்ளனர். அத்துடன் இதேநிலை உலகக் கோப்பையிலும் தொடர வாய்ப்பு உள்ளதாக நகைத்துள்ளனர். ஐசிசி நடத்தும் தொடரில் விராட் கோலி இந்திய கேப்டனாக முதலில் செயல்பட்டது 2017 சேம்பியன் டிராபி ஆகும். இந்த தொடரில் சிறப்பாக இந்திய அணி விளைய்டினாலும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்திய கேப்டன் விராட் கோலி தற்போது கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். களத்தில் விராட் கோலி-க்கு உதவி தேவைப்படும் போது அவருக்கு உதவுவது தனது கடமை என இந்திய துணைக் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
"நான் உலகக் கோப்பை தொடரில் இந்திய துணைக்கேப்டனாக விராட் கோலிக்கு துனைநின்று, அவருக்கு மிகுந்த உதவியாக இருப்பேன். இதனைதான் கடந்த சில வருடங்களாக நான் செய்து வருகிறேன்".
என ரோகித் சர்மா தனியார் பத்திரிகை ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலத்தில் நிகழ்வை எடுத்துக்காட்டாகவும் தெரிவித்துள்ளார். மகேந்திர சிங் தோனி இந்திய கேப்டனாக இருந்தபோது சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரெந்தர் சேவாக் அவருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதேபோல் தற்போது இந்திய அனுபவ வீரர்கள் விராட் கோலி-க்கு கேப்டன் ஷீப்பில் உதவுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
எம்.எஸ்.தோனி இந்திய கேப்டனாக இருந்தபோது அவருக்கு ஆலோசனை தேவைப்பட்டால் சச்சின் பாஜி, விரேந்தர் சேவாக் மற்றும் மற்ற அனுபவ வீரர்களிடம் கேட்டுப் பெறுவார். தற்போது நாங்கள் இந்திய அணியில் அந்த இடத்தில் உள்ளோம். எனவே விராட் கோலி-க்கு ஆலோசனை தேவைப்படும்போது அதனை நாங்கள் நிவர்த்தி செய்வோம்.
2019 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியானது ஜீன் 5 அன்று ரோஸ் பௌல் கிரிக்கெட் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மோத உள்ளது.