நம் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின். இவர் தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிருக்கு போராடி வருகிறார். இவரைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடாவை சேர்ந்தவர். இவர் நம் இந்திய அணியில் 1999ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டுகள் வரை சச்சின் மற்றும் அசாருதீன் தலைமையில் விளையாடியவர். இவர் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளானார். அந்த விபத்தில் இவரது உடல் படுகாயம் அடைந்தது. இன்றுவரை மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். ஆனால் மருத்துவ சிகிச்சைக்கு இவரின் குடும்பத்தாரிடம் போதிய பண வசதி இல்லை.
இவரது சிகிச்சைக்கு தற்போது ஒரு நாளைக்கு ரூபாய் 70 ஆயிரம் தேவைப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இவரது மருத்துவ செலவு 11 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு கணையம் மற்றும் கல்லீரல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது குடும்ப சூழ்நிலையை அறிந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இவரது மருத்துவ செலவிற்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்து உதவியுள்ளது. அதுமட்டுமின்றி பரோடா கிரிக்கெட் சங்கமும் தலா மூன்று லட்சங்கள் வரை இவரது குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி சில தனி நபர்களும் இவரது குடும்பத்திற்கு உதவி வருகின்றனர்.
இவர் இதுவரை 138 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல்தர போட்டிகளில் இவர் 9192 ரன்களை எடுத்துள்ளார். கடந்த 2008 ஆம் வருடம் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்துவிட்டார். இவர் ஓய்வு பெற்ற பின்பும் 2016 ஆம் ஆண்டு பரோடா அணிக்கு 17 சீசன்களில் பயிற்சியாளராக இருந்துள்ளார். அந்த பரோடா அணியில் விளையாடியவர்கள் தான் நமது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான். தற்போது இவர்களும் சேக்கப் மார்ட்டினுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
மேலும் ஜேக்கப் மார்ட்டின் உடன் விளையாடிய நமது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது உதவ முன் வந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி கூறியதாவது, நாங்கள் அணியில் ஒன்றாக விளையாடியுள்ளோம். அவர் மிகவும் அமைதியான நபர் என்பது எனக்கு நினைவில் இருக்கிறது. மார்ட்டின் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். அவரது குடும்பத்தினர் தனியாக இருப்பதாக கவலைப்பட வேண்டாம் நான் முடிந்த உதவிகளைச் செய்வேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் மற்றும் முனாப் படேல் ஆகியோரும்தற்போது உதவ முன்வந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியமும் மற்றும் சக கிரிக்கெட் வீரர்களும் உதவ முன்வந்துள்ளதால் இவருடைய சிகிச்சைக்கான பணத்தேவை பூர்த்தி ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி சேர்க்கப் மார்ட்டின் விரைவில் குணமடைய அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.