சில நாட்களுக்கு முன்பு இரு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயர்களை கிரிக்கெட் உலகில் பெரும் உச்சத்தில் பதிய வைத்தனர். அதில் ஒருவர் உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பூம்ரா. இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றொரு புதிய கண்டத்தில் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தனது சீரனா மற்றும் சிறப்பான ஆட்டத்திறனிற்காக அதிகம் புகழப்பட்டார் பூம்ரா.
மற்றொருவர் பல்வேறு மைல்களுக்கு அப்பால் உள்ள கர்நாடக மாநிலத்தின் ஆளூரில் நடந்த துலீப் கோப்பையில் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி சாதனைப் படைத்து வரும் ஜலஜ் சக்சேனா மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ளார். முதல் தர போட்டிகளை மட்டுமே தனது குறிக்கோளாக கொண்டு தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை உலகிற்கு நிறுபித்து இந்திய தேர்வுக்குழுவின் கவனத்தை கவரச் செய்துள்ளார்.
கடந்த வாரம் நடந்த துலீப் கோப்பைத் தொடரில் இந்தியா ரெட் மற்றும் இந்திய ப்ளூ அணிகள் மோதிய போட்டியில் 122வது ஓவரில் வரூன் ஆரோனின் கடைசி விக்கெட்டை ஜலாஜ் சக்சேனா வீழ்த்தினார். இந்த விக்கெட் ஒரு சாதாரண விக்கெட் இல்லை. இந்த விக்கெட் ஜலாஜ் சக்சேனாவின் கிரிக்கெட் வாழ்வில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டிய விக்கெட் ஆகும். தன்னை தானே மெருகேற்றி ஜலாஜ் சக்சேனாவின் நீண்டகால கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு ஆகும். முதல்தர கிரிக்கெட்டில் 6000+ ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் ஜலாஜ் சக்சேனா தற்போது இனைந்துள்ளார்.
மேலும் இந்தச் சாதனையை முதல் தர கிரிக்கெட்டில் செய்த 19 இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். CK நாயுடு, கபீல் தேவ், லாலா அமர்நாத், பாலி உம்ரைசர், விஜய் ஹசாரே, வினோ மான்கட் மற்றும் தற்போதைய இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரைத் தொடர்ந்து இப்பட்டியலில் ஜலாஜ் சக்சேனா இனைந்துள்ளார்.
"ஸ்போர்ட்ஸ் கீடா"வின் பிரத்யேக சந்திப்பில், இம்மைல்கல்லை அடைந்ததற்காக தான் பெற்ற மகிழ்ச்சியை ஜலாஜ் சக்சேனா பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, "நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கபீல் தேவ், லாலா அமர்நாத், பாலி உம்ரீகர், விஜய் ஹாசரே போன்ற கிரிக்கெட் லெஜன்ட்களின் பெயர் பட்டியலில் என்னுடைய பெயர் இடம்பெற்றிருப்பதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த சாதனையை நிறைவு செய்த ஒரே உள்ளூர் கிரிக்கெட் வீரர் நான்தான் என்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்."
அவர் சொன்ன இறுதி வாக்கியம் ஜலாஜ் சக்சேனாவின் சிறப்பை வெகுவாகவே எடுத்துரைக்கிறது. இத்தகைய பெரிய மைல்கல்லை அடைந்த வீரர் ஏன் சர்வதேச தேர்வுக்குழுவின் கண்ணில் படவில்லை என்பது பெரும் வருத்தத்தை அளிக்கிறது.
ஜலாஜ் சக்சேனா இதனைப் பற்றி சிறிதும் கண்டுகொள்வதில்லை. தமக்கு வாய்ப்பளிக்கும் இடங்களில் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை அணியில் தனியாக எடுத்துரைக்கிறார். அந்த அளவிற்கு அவரது சிறப்பான ஆட்டம் தொடர்ந்து வெளிபட்ட வண்ணம் உள்ளது. சர்வதேச வாய்ப்பை பற்றி சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
தனது கிரிக்கெட் வாழ்வை சிறப்பாக மாற்றியப் பங்கு தனது தந்தை மற்றும் சகோதரரைச் சேரும் எனக் கூறுகிறார் ஜலாஜ் சக்சேனா. இவரது சகோதரர் ஒரு கிரிக்கெட் வீரர், தந்தை நீச்சல் வீரர். தங்களது குடும்ப உறுப்பினர்களால் உந்தப்பட்டு பெரும் மைல்கல்லை ஜலாஜ் சக்சேனா அடைந்துள்ளார். சக்சேனாவிற்கு அளிக்கப்பட்ட அதிகப்படியான உத்வேகத்தால் தற்போது மாபெரும் ஆல்ரவுண்டராக உள்ளளூர் கிரிக்கெட்டில் உருவெடுத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஜலாஜ் சக்சேனா பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பேட்டிங் சராசரி 37.30 மற்றும் பௌலிங் சராசரி 28.19 ஆகும். இதற்கு மேலும் சிறந்த ஆல்-ரவுண்டர் உள்ளூர் கிரிக்கெட்டில் இருக்கிறாரா என்பது சந்தேகம்தான்.
இவர் ஒரு பேட்டிங் ஆல்-ரவுண்டரா அல்லது பௌலிங் ஆல்-ரவுண்டரா என்பதை கணிக்க இதுவரை கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பி விருகின்றனர். இவர்களது ஆட்டத்திறன் அவ்வளவு சிறப்பாக இரண்டிலுமே உள்ளது. இதனைப் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பியபோது, "எனது அணிக்கு பேட்ஸ்மேன் தேவைப்படும் போது நான் ஒரு பேட்ஸ்மேன், எனது அணிக்கு பௌலிங் தேவைப்படும் போது நான் பௌலர்" என சாதுரியமாக பதிலளித்தார் ஜலாஜ் சக்சேனா.
எதிர்பாராத வகையில் இவரது சிறப்பான ஆட்டத்திற்கு ஏற்ற ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் காலம் எப்பொழுது ஒரே நிலையில் இருக்காது என்பதைப் போல 2019ல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாட ஜலாஜ் சக்சேனாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.
ரிக்கி பாண்டிங் மற்றும் சவ்ரவ் கங்குலியின் சிறப்பான அனுபவங்களை அவர்களிடமிருந்து பெற்று கொண்டதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜலாஜ் சக்சேனா கூறுகிறார். அவர்கள் அனைத்து வீரர்களையும் வெகுவாகவே ஊக்கமளித்தனர்.
மேலும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் போது ஜலாஜ் சக்சேனாவின் வாழ்வில் மறக்க இயலாத ஒரு நிகழ்வு நடந்ததாக தெரிவித்தார். சவ்ரவ் கங்குலி, சக்சேனாவிடம் வந்து "உங்களுடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும், தான் அதனை பெங்காலுக்கு எதிரான போட்டியில் கண்டதாகவும் தெரவித்ததாக சக்சேனா தெரிவித்தார். சக்சேனா கேரளாவிற்காக சற்று கடினமாக ஆடுகளமான ஈடன் கார்டன் மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை பெங்கால் அணிக்கு எதிராக வெளிப்படுத்தினார். பெங்கால் அணியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் விளையாடும் அணி இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படும் போது தன் பேட்டிங்கால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை கரையேற்றியுள்ளார். தன்னுடைய ஆட்டத்தை மேன்மேலும் மெருகேற்றவும், சில காரணங்களாலும் ஜலாஜ் சக்சேனா 2016ல் கேராளா அணிக்காக விளையாட ஆரம்பித்தார்.
இந்த முடிவு குறித்து ஜலாஜ் சக்சேனாவிடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது, "நான் கேராளா அணியில் இடம்பெற்றபோது ஆரம்பத்தில் பிளேட் டிவிசன் சுற்றுல் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தேன். அதன்பின் கேரள அணியை என்னுடைய பங்களிப்பை அளித்து எலைட் சுற்றுக்கு தகுதிபெற்றேன். என்னுடைய ஆட்டத்திறன் சிறப்பாக இருந்த காரணத்தால் நான் வெகு சீக்கிரமே பிளேட் டிவிசன் சுற்றுக்கு விளையாட தகுதி பெற்றேன்.
மேலும் இந்த புதிய அணி மிகவும் பிடித்துள்ளதாகவும், அணியின் வீரர்களுடான அனுகுமுறை சரியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கேரள அணி எனக்கு போதுமான அளவு வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதாகவும் கூறியுள்ளார். கடந்த ரஞ்சிக்கோப்பை சீசனில் கேரள அணி முதல் முதலாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தனக்கு ஓய்வு என்பதே இல்லை எனவும், தொடர்ந்து எதிர்வரும் கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரவித்துள்ளார். ஜலாஜ் சக்சேனா தற்போது எந்த பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது அவர் பதிலளித்ததாவது, "நான் தற்போது என்னுடைய பேட்டிங் மற்றும் பௌலிங்கை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகிறேன். குறிப்பாக எனது பௌலிங்கில் வெவ்வேறு கோணங்களில் வீச முயற்சி வருகிறேன். மேலும் ஓடிஐ/டி20 கிரிக்கெட்டில் கலக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படப்போகிறேன்.
இவரது கிரிக்கெட் புள்ளி விவரங்களைக் காணும் போது ஜலாஜ் சக்சேனா எத்தகைய சிறந்த வீரர் என்பது நமக்கு தெரிகிறது. இவரது சாதனைகளுக்காக தேர்வுக்குழு இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது உலக கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளாகும்.
இவரது அற்புதமான ஆட்டத்திற்கு ஏன் இதுவரை பலன் கிடைக்கவில்லை என்ற விவாதம் சென்று கொண்டுள்ளது. ஜலாஜ் சக்சேனா பத்து வருடங்களுக்கும் மேலாக தனது பெரும் பங்களிப்பை மத்தியப்பிரதேச அணிக்காக அளித்துள்ளார். மிகவும் பொறுமையான பேட்ஸ்மேன் ஜலாஜ் சக்சேனா.
ஒரு கடினமான சூழ்நிலையில் அணிக்குத் தேவையான பங்களிப்பை அளிப்பதில் ஜலாஜ் சக்சேனா வல்லவர். இவர் இதுவரை இந்திய அணிக்காக விளையாடியதில்லை. இருப்பினும் தனது முயற்சியை கைவிடாமல் ஓடிக்கொண்டுள்ளார் ஜலாஜ் சக்சேனா.
ஜலாஜ் சக்சேனாவின் கிரிக்கெட் புள்ளிவிவரங்கள் அவர் எவ்வளவு சிறந்த வீரர் என்பதை எடுத்துரைக்கிறது. கூடிய விரைவில் தேர்வுக்குழுவின் கண்களில் பட்டு சர்வதேச அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.