கடந்த சில ஆண்டுகளாகவே ஜலாஜ் சக்சேனா பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பேட்டிங் சராசரி 37.30 மற்றும் பௌலிங் சராசரி 28.19 ஆகும். இதற்கு மேலும் சிறந்த ஆல்-ரவுண்டர் உள்ளூர் கிரிக்கெட்டில் இருக்கிறாரா என்பது சந்தேகம்தான்.
இவர் ஒரு பேட்டிங் ஆல்-ரவுண்டரா அல்லது பௌலிங் ஆல்-ரவுண்டரா என்பதை கணிக்க இதுவரை கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பி விருகின்றனர். இவர்களது ஆட்டத்திறன் அவ்வளவு சிறப்பாக இரண்டிலுமே உள்ளது. இதனைப் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பியபோது, "எனது அணிக்கு பேட்ஸ்மேன் தேவைப்படும் போது நான் ஒரு பேட்ஸ்மேன், எனது அணிக்கு பௌலிங் தேவைப்படும் போது நான் பௌலர்" என சாதுரியமாக பதிலளித்தார் ஜலாஜ் சக்சேனா.
எதிர்பாராத வகையில் இவரது சிறப்பான ஆட்டத்திற்கு ஏற்ற ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் காலம் எப்பொழுது ஒரே நிலையில் இருக்காது என்பதைப் போல 2019ல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாட ஜலாஜ் சக்சேனாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.
ரிக்கி பாண்டிங் மற்றும் சவ்ரவ் கங்குலியின் சிறப்பான அனுபவங்களை அவர்களிடமிருந்து பெற்று கொண்டதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜலாஜ் சக்சேனா கூறுகிறார். அவர்கள் அனைத்து வீரர்களையும் வெகுவாகவே ஊக்கமளித்தனர்.
மேலும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் போது ஜலாஜ் சக்சேனாவின் வாழ்வில் மறக்க இயலாத ஒரு நிகழ்வு நடந்ததாக தெரிவித்தார். சவ்ரவ் கங்குலி, சக்சேனாவிடம் வந்து "உங்களுடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும், தான் அதனை பெங்காலுக்கு எதிரான போட்டியில் கண்டதாகவும் தெரவித்ததாக சக்சேனா தெரிவித்தார். சக்சேனா கேரளாவிற்காக சற்று கடினமாக ஆடுகளமான ஈடன் கார்டன் மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை பெங்கால் அணிக்கு எதிராக வெளிப்படுத்தினார். பெங்கால் அணியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.