இவர் விளையாடும் அணி இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படும் போது தன் பேட்டிங்கால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை கரையேற்றியுள்ளார். தன்னுடைய ஆட்டத்தை மேன்மேலும் மெருகேற்றவும், சில காரணங்களாலும் ஜலாஜ் சக்சேனா 2016ல் கேராளா அணிக்காக விளையாட ஆரம்பித்தார்.
இந்த முடிவு குறித்து ஜலாஜ் சக்சேனாவிடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது, "நான் கேராளா அணியில் இடம்பெற்றபோது ஆரம்பத்தில் பிளேட் டிவிசன் சுற்றுல் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தேன். அதன்பின் கேரள அணியை என்னுடைய பங்களிப்பை அளித்து எலைட் சுற்றுக்கு தகுதிபெற்றேன். என்னுடைய ஆட்டத்திறன் சிறப்பாக இருந்த காரணத்தால் நான் வெகு சீக்கிரமே பிளேட் டிவிசன் சுற்றுக்கு விளையாட தகுதி பெற்றேன்.
மேலும் இந்த புதிய அணி மிகவும் பிடித்துள்ளதாகவும், அணியின் வீரர்களுடான அனுகுமுறை சரியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கேரள அணி எனக்கு போதுமான அளவு வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதாகவும் கூறியுள்ளார். கடந்த ரஞ்சிக்கோப்பை சீசனில் கேரள அணி முதல் முதலாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தனக்கு ஓய்வு என்பதே இல்லை எனவும், தொடர்ந்து எதிர்வரும் கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரவித்துள்ளார். ஜலாஜ் சக்சேனா தற்போது எந்த பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது அவர் பதிலளித்ததாவது, "நான் தற்போது என்னுடைய பேட்டிங் மற்றும் பௌலிங்கை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகிறேன். குறிப்பாக எனது பௌலிங்கில் வெவ்வேறு கோணங்களில் வீச முயற்சி வருகிறேன். மேலும் ஓடிஐ/டி20 கிரிக்கெட்டில் கலக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படப்போகிறேன்.
இவரது கிரிக்கெட் புள்ளி விவரங்களைக் காணும் போது ஜலாஜ் சக்சேனா எத்தகைய சிறந்த வீரர் என்பது நமக்கு தெரிகிறது. இவரது சாதனைகளுக்காக தேர்வுக்குழு இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது உலக கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளாகும்.
இவரது அற்புதமான ஆட்டத்திற்கு ஏன் இதுவரை பலன் கிடைக்கவில்லை என்ற விவாதம் சென்று கொண்டுள்ளது. ஜலாஜ் சக்சேனா பத்து வருடங்களுக்கும் மேலாக தனது பெரும் பங்களிப்பை மத்தியப்பிரதேச அணிக்காக அளித்துள்ளார். மிகவும் பொறுமையான பேட்ஸ்மேன் ஜலாஜ் சக்சேனா.
ஒரு கடினமான சூழ்நிலையில் அணிக்குத் தேவையான பங்களிப்பை அளிப்பதில் ஜலாஜ் சக்சேனா வல்லவர். இவர் இதுவரை இந்திய அணிக்காக விளையாடியதில்லை. இருப்பினும் தனது முயற்சியை கைவிடாமல் ஓடிக்கொண்டுள்ளார் ஜலாஜ் சக்சேனா.
ஜலாஜ் சக்சேனாவின் கிரிக்கெட் புள்ளிவிவரங்கள் அவர் எவ்வளவு சிறந்த வீரர் என்பதை எடுத்துரைக்கிறது. கூடிய விரைவில் தேர்வுக்குழுவின் கண்களில் பட்டு சர்வதேச அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.