அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களில் இங்கிலாந்து ஒருநாள் அணியில் பல பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இவற்றில் குறிப்பிடும் வகையில், தொடக்க வீரர்களான ஜாசன் ராய் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் துரதிஷ்டவசமாக இந்த ஒரு நாள் போட்டிகளில் விளையாட போவதில்லை. இவர்களுக்கு பதிலாக மூன்று மாற்று வீரர்களை அணியில் இணைத்துள்ளது, இங்கிலாந்து தேர்வுக்குழு.
2019 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர், அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரையும் நடத்தவுள்ளது, இங்கிலாந்து அணி. இருப்பினும், இந்த அணியில் உள்ள முதல் தர வீரர்கள் அனைவரும் ஆடும் லெவனில் இணைக்கப்பட மாட்டார்கள் என தெரிகிறது. ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர தொடக்க பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் 21 நாட்கள் தடையில் உள்ளார். இருப்பினும், இவரது சக வீரரான ஜாசன் ராய் முதுகு வலி காரணமாக தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்.
இதன் காரணமாக, இவ்விரு தொடக்க பேட்ஸ்மேன்களும் மேற்கண்ட அணிகளுக்கு எதிரான தொடர்களில் இருந்து விலகியுள்ளனர். தற்போது இங்கிலாந்து அணியில் பெண் டக்கெட்,டேவிட் மலன் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் மாற்று வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஜேம்ஸ் வின்ஸ் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இணைக்கப்பட்டுள்ளார். இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் இடம்பெற்றுள்ள பெண் டக்கெட், தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகிறார். மற்றொருபுறம், டேவிட் மலன் இதுவரை 15 டெஸ்ட் போட்டியில் மற்றும் 5 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இடம் பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இதுவரை காணாத இவர், தற்போது அறிமுகமாக உள்ளார்.
2016 நவம்பர் மாதத்திற்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து இடம்பெறாத வீரரான பெண் டக்கெட், ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்பு அணியில் திரும்பியுள்ளார். கடந்த 10 மாதங்களாக சர்வதேச போட்டியில் இடம் பெறாத டேவிட் மலன் தற்போது இங்கிலாந்து அணியில் இணைந்துள்ளார். மற்றொரு முனையில், ஜேம்ஸ் வின்ஸ் 2018 பிப்ரவரி மாதத்திற்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆனால், மூன்று வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று தங்களது அபார திறமையை நிரூபித்து வருகின்றன.
புதிதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள்: இயான் மோர்கன், மொயின் அலி, சோப்ரா ஆச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், டாம் கரன், ஜோ டென்லி, கிறிஸ் ஜோர்டன், ஜேம்ஸ் வின்ஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.
அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:
இயான் மோர்கன், சோப்ரா ஆர்ச்சர், டாம் கரன், கிறிஸ் ஜோர்டன், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, பெண் ஃபோக்ஸ், டேவிட் மலன், பெண் டக்கெட்.