தற்பொழுது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வருகின்றது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறிய இங்கிலாந்து அணி கடந்த நான்கு வருடங்களாக சிறப்பான முறையில் ஒருநாள் போட்டிகளை அணுகி வருகிறது. பல கிரிக்கெட் நிபுணர்கள் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.
இந்த உலகக்கோப்பை போட்டிகள் அனைத்தும் பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளங்களில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவுண்டர்களின் அளவு குறைவாக இருப்பதால் பலமான பேட்டிங் வரிசை கொண்ட அணிகள் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்பு இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாட தொடங்கியது, இது இங்கிலாந்து அணிக்கு அதிக ரன்களை குவிக்க உதவியது. இம்முறை உலகக் கோப்பை இங்கிலாந்து மண்ணில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி மற்ற அணிகளை விட சற்று பலம் வாய்ந்து காணப்படலாம்.
இங்கிலாந்து அணியின் பலம் அவர்களது பேட்டிங் வரிசை ஆகும், நீளமான பேட்டிங் வரிசை கொண்ட இந்த அணி அதிரடியான டாப் ஆடரையும் கொண்டிருக்கிறது. இந்த அணியின் பின்வரிசையில் வரும் வோக்ஸ், ரஷீத் மற்றும் பிளங்கெட் போன்ற வீரர்கள் சிறப்பான முறையில் பேட் செய்வதன் மூலம் மற்ற அணிக்கு இல்லாத பலம் இந்த அணிக்கு உண்டு எனலாம்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையில் பெரும்பாலும் அதிரடி ஆட்டக்காரர்களே உள்ளனர் இவற்றிலும் பொறுமையாக நின்று விளையாடக் கூடியவர் இருக்கின்றார் அவரே இங்கிலாந்து அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேன் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட்.
இவருக்கு முன்பு ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவும் இவருக்கு பின்பு மோர்கன், ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் போன்ற வீரர்கள் வருவதால் ஜோ ரூட் நிலைத்து நின்று விளையாடி வருகிறார்.
பந்தை அருமையாக விளையாடுவதன் மூலமும் சரியான திசையில் பவுண்டரிகளை விளாசுவதன் மூலமும் இங்கிலாந்து அணியின் நிலையான பேட்ஸ்மேனாக திகழ்கிறார் ஜோ ரூட்.
இவர் அதிக பந்துகளை வீணடிக்காமல் அவ்வப்போது பவுண்டரிகளும் ஒன்று, இரண்டு ஓட்டங்களை எடுப்பதில் வல்லவராகவும் இருந்து வருகிறார்.
சிறப்பான ஆட்டத்திறனை உடைய இவரது பேட்டிங் ஆற்றில் பாய்கின்ற தண்ணீரைப் போல இவர் விளாசுங்கின்ற பந்துகள் பவுண்டரிகளை நோக்கி நேர்த்தியாக செல்கின்றன. மற்ற பேட்ஸ்மேன்களை போல் தேவையில்லாத ஷாட்களை ஆடி வெளியேறமாட்டார், மிகவும் பொறுமையுடன் தனது ஆட்டத்தை அணுகுவார்.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் மற்ற பேட்ஸ்மென்கள் அதிரடியாக ரன்களை குவிப்பதனால் ரூட் மெதுவாக விளையாடி வருகிறார் என்றாலும் கூட கடினமான ஆடுகளங்களில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பி கொண்டிருக்கும் பொழுது அங்கு ரூட் எளிதாக ரன்களை சேர்ப்பதில் வல்லவர்.
அதிக பொறுப்புடன் விளையாடும் ரூட் மற்ற பேட்ஸ்மேன்கள் வெளியேறினாலும் பின் வரிசையில் வரும் பேட்ஸ்மேன்களை கொண்டு சரிவிலிருந்து மீட்பதில் சிறந்த வீரர்.
இவர் சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும் பலமுறை 50 ரன்களை கடந்தும் சதம் அடிக்க தவறி வருகின்றார். இவர் அனைத்து போட்டிகளில் தனது பணியை முடிப்பதில்லை.
இருப்பினும், தற்பொழுது நடைபெற்று வரும் உலககோப்பை போட்டியில் சிறந்து விளங்குவர் என்று எதிர்பார்க்க படுகின்றது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இவரது பலவீனத்தை பலமாக மாற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.
இங்கிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேனான இவர் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து இங்கிலாந்து அணியின் முதல் உலகக் கோப்பையை பெற உதவுவார் என்று பெரிதும் இங்கிலாந்து ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது .