உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக களமிறங்க காத்திருக்கும் மேற்கு இந்திய வீரர் 

Jofra Archer
Jofra Archer

கிரிக்கெட் விளையாடும் அனைவருக்கும் ஒரு குறிக்கோளாக இருப்பது உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என்பது தான். ஆனால் அந்த வாய்ப்பு வெகு சிலர்க்கே அமைகிறது. அப்படிப்பட்ட அந்த பொன்னான வாய்ப்பு இங்கிலாந்து அணிக்காக மேற்கு இந்திய தீவு வீரருக்கு கிட்டியுள்ளது, அவர் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் ஜோப்ரா ஆர்ச்சர். ஆனால் உலக கோப்பைக்கு இன்னும் பல நாட்கள் உள்ள நிலையில் எப்படி இவர் 2019 உலக கோப்பையில் விளையாடுவார் என்று அவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது, அதுபற்றி ஒரு அலசல் .

யார் இந்த ஜோப்ரா ஆர்ச்சர் ?

ஜோப்ரா ஆர்ச்சர், பார்படாஸில் பிறந்து தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார் . மேலும் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக கடந்த வருடம் விளையாடினார் . இதில் இவரின் வேகபந்து வீச்சு பெரிதும் பாராட்டப்பட்டது. கிரிக்கெட்டில் இவரின் வளர்ச்சியானது ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இவர் டி20 ஸ்பெசலிஸ்டாகவும் பார்க்கப்படுகிறார்.

விதிமுறையில் மாற்றம்:

23 வயதான இவர் 2015ல் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார், முந்தைய ஒழுங்குமுறைகளின் கீழ் ஏழு ஆண்டுகளுக்கு தகுதிபெற வேண்டிய கட்டாயமானது. அதன் காரணமாக இவர், 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வரை இங்கிலாந்தின் தேர்வுக்கு தகுதியற்றதாக இருந்தார் .

ஆனால் தற்போது அந்த விதியில் சிறிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் . அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

பழைய விதி :

# இங்கிலாந்தில் அல்லது வேல்ஸில் பிறந்திருக்க வேண்டும் .

#இங்கிலாந்து அல்லது வேல்ஸ் குடிஉரிமம் பெற்று 7 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்

# மற்ற அணிகளில் முழுநேர உறுப்பினராக இருக்க கூடாது .

புதிய விதி :

# இங்கிலாந்தில் அல்லது வேல்ஸில் பிறந்திருக்க வேண்டும் .

#இங்கிலாந்து அல்லது வேல்ஸ் குடிஉரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்

# மற்ற அணிகளில் முழுநேர உறுப்பினராக இருக்க கூடாது .

அதாவது இரண்டாவது விதியில் 7 ஆண்டுகளுக்கு பதில் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது . இதன் காரணமாகவே ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்காக 2019 விளையாட தகுதிபெற்றுள்ளார் .

ஜோப்ரா ஆர்ச்சரின் பலம் :

ஜோப்ரா ஆர்ச்சர், மணிக்கு 145 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடியவர் , அது மட்டுமல்லாது மிக சிறந்த பில்டெர். இவரின் வருகை இங்கிலாந்து அணிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

மேலும், இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் போட்டி தொடரில் பங்கேற்கிறார் . அதை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியுடனான புகழ் வாய்ந்த ஆஷஸ் தொடரில் பங்கேற்பார் என தெரியவருகிறது . இதை வைத்து பார்த்தால் உலக கோப்பை ரேஸில் இவரும் குதிப்பார் என்பதே நிதர்சனமான உண்மை.

இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வெளிநாட்டவர்கள் :

கேப்பிலெர் வேசெல்ஸ் (தென் ஆப்பிரிக்கா ), இயன் மோர்கன் (ஐயர்லாந்து), கெவின் பீட்டர்சன் (தென் ஆப்பிரிக்கா ), நாசீர் ஹுசைன் (இந்தியா ), என பட்டியல் நீளுகிறது . எனவே, ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது ஒன்றும் புதிதல்ல .