அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் ஜோஹன் போதா

Johan Botha

நடந்தது என்ன?

முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஜோஹன் போதா இன்று அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார். இவர் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று அசத்தியுள்ளார். ஜோஹன் போதா தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக்கில் ஹபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியில் விளையாடி வந்தார். 36 வயதான போதா தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்தார்.

ஜோஹன் போதா 78 ஒருநாள் போட்டிகளில் 72 விக்கெட்டுகள் மற்றும் 609 ரன்களை குவித்துள்ளார் . 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 40 டி20 போட்டிகளிலும் பங்கேற்று 37 விக்கெட்டுகள் மற்றும் 201 ரன்களை குவித்துள்ளார்.

ஹபர்ட் ஹரிக்கேன்ஸ் இவரது ஓய்வை தனது இனையதளத்தில் கூறியதாவது : 36 வயது ஆல்ரவுண்டர் உடற்சோர்வு மற்றும் ஃபிட்னஸ் குறைவு காரணமாக தனது ஓய்வை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உங்களுக்கு தெரியுமா?

ஜோஹன் போதா தனது 10 வருடங்களாக கிரிக்கெட் வாழ்க்கையில் சர்வதேச போட்டிகள் மற்றும் உலகெங்கும் நடைபெற்று வந்த டி20 லீக்கில் பங்கேற்று வந்தார். ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்க ஓடிஐ மற்றும் டி20யில் அகற்ற முடியாத ஆஃப் ஸ்பின்னராக போதா இருந்தார் . இருப்பினும் சீரான ரன்குவிக்காததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஜோஹனாஸ் பெர்க்-ஐ சேர்ந்த போதா 2005ல் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் . இவர் கடைசியாக 2012 மார்ச் மாதம் சர்வதேச போட்டிகளில் விளையாடினார் . தென்னாப்பிரிக்க அணியிலிருந்து இவர் நீக்கப்பட்ட பிறகு வெவ்வேறு டி20 லீக்கில் பங்கேற்று வந்தார்.

கதைக்கரு

போதா சமீபத்தில் தான் பிக் பாஸில் , ஹபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியில் இனைந்தார் . இவரது ஓய்வு முடிவு அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியின் இனைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது : போதா ஹபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி சார்பாக 10 போட்டிகளில் விளையாடியுள்ளார் . கடைசி போட்டியாக இன்று நடைபெற உள்ள சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளார். தற்போது ஹபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மேலும் கூறியதாவது :

போதா ஒரு சிறந்த ஃபிட்னஸ் கொண்ட உடற்பயிற்சியாளர் , ரேஸர் , கோல்ஃப் வீரர் , அதெலெட்டர் என அனைத்திலும் கலக்குபவர் . 2018ல் செப்டம்பரில் அபுதாபி டி20யில் சிறப்பான ஆட்டத்திறனை ஜோஹன் போதா வெளிபடுத்தியதால் அவர் ஹபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அடுத்தது என்ன?

போதா நிறைய வருடங்கள் தனது கிரிக்கெட் வாழ்க்கையை விளையாடி வந்தார். அவர் அடுத்தாக பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது . ஹபர்ட் ஹரிக்கேன்ஸ் அடுத்தாக பிரிஸ்பேன் ஹிட் அணிக்கு எதிராக பிப்ரவரி 22ல் விளையாட உள்ளது. இவருடைய பங்களிப்பு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு மிகவும் உரித்தானது ஆகும். கூடிய விரைவில் ஏதேனும் ஒரு அணியின் பயிற்சியாளராக ஜோஹன் போதா-வை நாம் காணலாம்.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now