கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி சார்பில் 11 ஆட்டக்காரர்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி நான்கு வீரர்கள் மாற்றுவீரர்களாகவும் அணியில் தேர்வு செய்யப்படுகின்றனர். களத்தில் உள்ள வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்ப்பட்டால் அவர்களுக்கு மாற்று வீரர்களாக நான்கு வீரர்களுல் ஏதேனும் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். ஆனால் அவர்களுக்கு பீல்டிங் செய்ய மட்டுமே அனுமதி உண்டு. பேட்டிங் செய்யவோ அல்லது பந்து வீசவோ அனுமதி இல்லை. அந்த வகையில் மாற்று வீரராக அணியில் இடம் பெற்று ஆட்ட நாயகன் விருதினைப் பெற்ற வீரரைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
1993 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை, தென்னாப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்ற சி.ஏ.பி ஜூப்லி கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்ரிக்க அணிகள் மோதும் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி முதலில் பேட் செய்த தென்னாப்ரிக்க அணி 180 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அந்த அணியில் அதிக ரன்கள் குவித்திருந்த டி ஜே குல்லினான் காயம் காரணமாக 70 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் அவருக்கு பதிலாக பீல்டிங் செய்வதற்கு மாற்று வீரராக ஜோன்டி ரேட்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆனால் ஜோன்டி ரோட்ஸ்-ன் அசாத்திய பீல்டிங் திறமையால் அந்த போட்டியில் ஐந்து கேட்ச்களை பிடித்து தென்னாப்ரிக்க அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென்னாப்ரிக்க அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.
இந்த பேட்டியில் திருப்பு முனையாக அமைந்ததே ஜோன்டி ரோட்ஸ் பிடித்த 5 கேட்ச் தான். இதனால் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக அணியின் விளையாடும் 11- ல் இடம் பெறாத ஒரு வீரருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஜோன்டி ரோட்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் வல்லுநர்களையும் திரும்பி பார்க்க வைத்தது.
ஒரு நாள் பேட்டி ஒன்றில் அணியின் விக்கெட் கீப்பர் தான் அதிக கேட்ச் பிடிக்கும் வீரராக இருப்பார். போட்டியில் அதிகட்சமாக மூன்று அல்லது நான்கு கேட்ச் வரை பிடிப்பார். ஆனால் கீப்பர் அல்லாத வீரர் ஒருவர் 5 கேட்ச்களை பிடித்தது இதுவே கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை. இதுமட்டுமல்லாமல் ஜோன்டி ரோட்ஸ் முதல் தர போட்டி ஒன்றில் ஏழு கேட்ச் பிடித்தும் அசத்தியுள்ளார். இவரது பீல்டிங் திறமையை வெல்ல இன்றளவும் எந்தவொரு வீரராலும் இயலாது. அந்த போட்டியில் ஜோன்டி ரோட்ஸ் பிடித்த 5 கேட்ச்களின் வீடியோ இணைப்பு..