சமீபத்தில் இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற ஜோஃப்ரா ஆர்சர், ஜோஃப்ரா ஆர்சர், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரை புகழ்ந்து தள்ளியுள்ளார். ஜாஸ் பட்லர் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை விளாசும் திறமை கொண்டு 360 டிகிரி பேட்ஸ்மேனாக திகழ்கிறார். பொதுவாக 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருபவர் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ். இவர் கடந்த வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஜாஸ் பட்லர் கடந்த இரு வருடங்களாக தனது பேட்டிங்கை அதிகம் மேம்படுத்தியுள்ளார். பட்லர் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர். அத்துடன் இவருக்கு பந்துவீச பந்துவீச்சாளர்கள் மிகவும் சிரமப்படுவர். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை விளாசும் திறமை உடையவர். வலதுகை பேட்ஸ்மேனான இவர் சில சிறப்பான ஷாட்களை விளாசுவதில் வல்லவர். அத்துடன் பௌத்தர்களுக்கு தனது பேட்டிங் மூலம் பெரும் தலைவலியை ஏற்படுத்துவார்.
ஜாஸ் பட்லர் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த பாகிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சதம் விளாசினார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் 55 பந்துகளை எதிர்கொண்டு 110 ரன்களை விளாசி இங்கிலாந்து அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.
ஜாஸ் பட்லர் 130 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 41.54 சராசரியுடன் 3531 ரன்களை குவித்துள்ளார். இவரது பங்களிப்பு இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு நெருக்கடி சமயங்களில் அதிகமுறை உதவியுள்ளது.
ஜோஃப்ரா ஆர்சர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
வலைபயிற்சியில் நான் எதிர்கொண்ட சிறப்பான பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர். இவர் ஒரு 360 டிகிரி கிரிக்கெட்டர். பட்லர் நேராக பந்தை விளாசும் திறமை உடையவர் அத்துடன் விக்கெட் கீப்பருக்கு பின்னால் பந்தை சாதூரியமாக விளாசும் திறமை கொண்டவராகவும் திகழ்கிறார். பௌலர்கள் கண்டிப்பாக இவருக்கு பந்துவீச சிரமப்படுவர்.
இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் ஜோஃப்ரா ஆர்சர் ஒரு முக்கிய முன்னணி வீரராக உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்கிறார். இனிவரும் காலங்களிலும் அவரது சிறப்பான பேட்டிங் வெளிபடும் என்பதில் சந்தேகமில்லை.
இங்கிலாந்து அணி 2019 உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ள அணியாக திகழ்கிறது. தனது சொந்த மண் என்பதனால் இங்கிலாந்து அணிக்கு அதிக சாதகம் உள்ளது. கடந்த 4 வருடங்களாக ஓய்வில்லாமல் சிறப்பான ஆட்டத்தை சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி உழைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான உலகக் கோப்பை தொடரில் இயான் மோர்கனின் தலைமையிலான இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் மே 25 அன்று சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் மோத உள்ளது. மே 30 அன்று தொடங்க உள்ள உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது.