யுவராஜ் சிங்கின் ஐபிஎல் பயணம்! 

yuvraj singh
yuvraj singh

ஐபிஎல் தொடங்கிய 2007 ஆண்டு முதல் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருந்தவர் இந்திய அணியின் யுவராஜ் சிங் .ஆனால் நடந்து முடிந்த 'விவோ ஐ பி எல் 2019' -ல் ஆரம்பச் சுற்றுகளில் ஏலம் போகாத யுவராஜ், கடைசியில் மும்பை அணியால் அவரின் அடிப்படை தொகையான 1 கோடி ரூபாய் விலைக்கு எடுக்கப்பட்டுள்ளார்.

டி20 போட்டி என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்குவருபவர் யுவராஜ் சிங். இவர் டி20 போட்டியில் அதிவேக அரைசதம் மற்றும் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் என அனைத்து சாதனைகளுக்கும் சொந்தக்காரர் இவரே. இவர் ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 6 அணிகளுக்காக விளையாடி உள்ளார். முன்பு ஐபிஎல் 2018 -ல் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங் மொத்தம் 8 ஆட்டங்களில் வெறும் 65 ரன்களை மட்டும் எடுத்ததே அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு மிகப்பெரிய காரணமாக பல்வேறு தரப்பில் இருந்தும் கூறப்பட்டது.

மொத்தமாக 128 போட்டிகளில் ஆடியுள்ள யுவராஜ் 122 இன்னிங்ஸ்களில் 2652 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்துள்ள அவர் 12 அரைச்சதங்களும் விளாசியுள்ளார். மேலும் 73 இன்னிங்ஸ்களில் 36 விக்கெட்களும் எடுத்துள்ளார்.

யுவராஜ் சிங் ஆடிய அணிகள்

மும்பை இந்தியன்ஸ் , யுவராஜ் சிங் விளையாடப்போகும் ஆறாவது அணியாகும். இதற்கு முன் கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ், சன் ரைசெர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் விளையாடி உள்ளார்.

2008 கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐகான் பிளேயர்

2009 கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐகான் பிளேயர்

2010 கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐகான் பிளேயர்

2011 புனே வாரியர்ஸ் ஐகான் பிளேயர்

2012 --------------------------------ஆடவில்லை-------------------------------

2013 --------------------------------ஆடவில்லை-------------------------------

2014 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 கோடி

2015 டெல்லி டேர்டெவில்ஸ் 16 கோடி

2016 சன் ரைசெர்ஸ் ஹைதராபாத் 7 கோடி

2017 சன் ரைசெர்ஸ் ஹைதராபாத் -----------

2018 கிங்ஸ் லெவன் பஞ்சாப் 2 கோடி

2019 மும்பை இந்தியன்ஸ் 1 கோடி

ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை இருமுறை (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ்) ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார். சமீப காலமா யுவராஜின் ஆட்டத்தில் பழைய நேர்த்தியை காணவில்லை என்ற ஆதங்கம் பெரும்பாலானவர்களிடத்தில் இருக்கத்தான் செய்கிறது. இந்த முறை அதை யுவராஜ் பொய்யாக்குவரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இதுவரை மூன்று முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்காக யுவராஜ் சிங் இம்முறை ஆட உள்ளார். வலுவான அணியாக இருக்கும் மும்பை இந்தியன்ஸில் மேலும் ஒரு தனிப்பெரும் வீரர் சேர்க்கப்பட்டால் சொல்லவா வேண்டும். யுவராஜ் ரசிகர்களின் கனவும் மீண்டும் ஒரு கோப்பையாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதுமட்டுமல்லாமல் யுவராஜ் சிங் 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் அவரின் ரசிகர்களின் ஆசையும் இதுவே. யுவராஜ் ஏற்கனவே இந்தியாவிற்காக யு-13 ,யு-19 , டி20 மற்றும் 50 உலகக் கோப்பை போட்டிகளில் யுவராஜ் விளையாடியுள்ளார். இதில் அனைத்து தொடர்களிலும் விளையாடி கோப்பையை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் அனைத்து தொடர்களிலும் தொடர் நாயகன் விருதைப் பெற்றவரும் இவரே.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now