ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, இந்த தொடரில் ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா ஆஸ்திரேலியா டி20 போட்டியில் மோதியது. இந்த விருவிருப்பான போட்டியில் கடைசி பந்தில் இந்தியாவை வென்று ஆஸ்திரேலியா அணி. தொடரை 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆனால் இன்று ஆஸ்திரேலிய தரப்பில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்து உள்ளது அது பற்றி இங்கு காண்போம்..
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பங்கு கொள்ளும் இரண்டாவது டி 20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி 20 போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் விளையாடுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த கேன் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக வெளியேற்றபட்டதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவருக்கு மாற்றுதலாக ஆண்ரிவ் டை அணியில் சேர்க்கபட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விசாகபட்டிணத்தில் நடந்த முதல் டி20 க்காக பயிற்சி எடுத்த பொழுது அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறபடுகிறது.
வலை பயிற்சியில் பந்து வீசம் போது உடலின் இடது பக்கம் வலியால் அவதிபட்டுள்ளார். இது குறித்து ஆஸ்திரேலியாவின் டேவிட் பேக் கூறியதாவது, "விசாகப்பட்டிணத்தில் நடக்க இருக்கும் முதல் டி 20 போட்டிக்காக ஐதராபாத்தில் பயிற்சி மேற்கொள்ளபட்டது. அப்போதே வலியால் அவதி பட்ட அவர் இன்னும் மீண்டு வரவில்லை" என கூறியிருக்கிறார்.
அதனால் இந்த தொடரில் பங்கு பெறும் அளவிற்கு சரியான உடல் தகுதியை ரிச்சர்ட்சன் பெறவில்லை. அவர் மேலும் சிகிச்சைக்காக நாடு திரும்புகிறார். அது மட்டுமில்லாமல் அவரின் சிகிச்சையை கண்காணிப்போம் எனவும் டேவிட் பேக் கூறியிருந்தார்.
கேன் ரிச்சர்ட்சன் விலகிய பிறகு அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இன்றைய ஆட்டத்திற்கு உள்ளனர். ஏற்கனவே ஆஸ்திரேலியா இந்தியாவை வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதுவரை ஆஸ்திரேலியா இந்தியாவிடம் டி 20 தொடரை வென்றதே இல்லை, எனவே இன்றைய ஆட்டத்தை வெல்லும் முனைப்போடு காத்திருக்கிறது ஆஸ்திரேலியா, ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் பரபரக்கும் த்ரில் வெற்றியை கடைசி பந்தில் வென்றது ஆஸ்திரேலியா, இதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்போடு இந்திய அணியும் காத்துள்ளது .
கேன் ரிச்சர்சனுக்கு மாற்றுதலாக ஆன்ட்ரூ டை அணியில் புதியதாக சேர்க்கபட்டுள்ளார். அவர் இனி வரும் ஒரு நாள் போட்டிககளில் பங்கு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐ பி எல் சீசனில் சிற்ப்பாக விளையாடிய டை இந்திய மைதானங்களின் தன்மையை நன்றாக புரிந்து கொண்டவர் மேலும் இந்திய அணிக்கு அழுத்தத்தை கொடுப்பார் என எதிர் பார்க்கிறோம்.
இந்தியாவை பொறுத்த மட்டில் இன்று நடக்கவிருக்கும் போட்டி மிகவும் முக்கியமானது. இது வரை ஆஸ்திரேலியாவிடம் டி 20 தொடரை தோற்றதே இல்லை அதே நேரத்தில் கடந்த மேட்சில் கடைசி ஓவரில் சொதப்பிய உமேஷ் யாதவ் அணியில் தொடர்வாரா அல்லது அவருக்கு மாற்றாக வேறு பந்து வீச்சாளர் சேர்க்கபடுவாரா எனவும் ரசிகர்கள் ஆவலோடு எதிர் பார்க்கின்றனர்.