இன்று நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டிக்குப் பின்னர் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தங்களது தோல்வியை குறித்து கருத்து ஒன்றினை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், மூன்றுடி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இந்த ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்டின் கப்தில் மற்றும் காலின் முன்ரோஆகியோர் தங்களது விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே பறிகொடுத்தனர்.அதன்பின்பு கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லரும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கேன் வில்லியம்சன் அடித்த பந்தை கார்த்திக் பாண்டியா மிகச்சிறப்பாக கேட்ச் பிடித்தார்.
அதன் பின்பு சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர் 93 ரன்களும், நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான லதம் 51 ரன்களையும் விளாசினர். இதில் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்களை குவித்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது சமி 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். தவான் அதிரடியாக விளையாடி 28 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பின்பு விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஜோடி சேர்ந்தனர். இவருக்கும் சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினர். ரோகித் சர்மா 62 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 60 ரன்களிலும், அவுட் ஆகி வெளியேறினர். அதன் பின்பு ராயுடுவும், தினேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெற செய்தனர். இந்திய அணி 43 வது ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களின் விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமிக்கு இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியது என்ன என்றால், "இந்திய அணி எங்களுக்கு பாடம் கற்பித்து விட்டது. இந்திய அணி எப்போதும் மிகச்சிறப்பாக விளையாடுகிறார்கள். அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். மேலும் எங்கள் அணியில் ராஸ் டெய்லர் மிக சிறப்பாக விளையாடினார். அடுத்த போட்டியில் நாங்கள் எங்களது தவறுகளை திருத்திக்கொண்டு பெற்றி பெற முயற்சி செய்வோம்" என்று கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.