நாளை நாங்கள் தான் கட்டாயம் வெற்றி பெறுவோம் – வில்லியம்சன்!!

Newzealand Cricket Team
Newzealand Cricket Team

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி-20 போட்டி நாளை நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் நாங்கள் தான் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி நேற்று நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அந்தப் போட்டியை பற்றி முதலில் காண்போம்.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

Seifert
Seifert

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முண்ரோ மற்றும் செய்ஃபர்ட் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய முண்ரோ 2 சிக்சர்களை விளாசினார். பின்பு 34 ரன்களில் பாண்டியா ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் செய்ஃபர்ட் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக விளையாடிய செய்ஃபர்ட் அரை சதம் விளாசினார். சிறப்பாக விளையாடிய இவர் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அவுட்டாகி வெளியேறினார்.

இவர் 6 சிக்சர்களையும், 7 பவுண்டரிகளையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு கேப்டன் கேன் வில்லியம்சன் 34 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் வந்து அதிரடி காட்டிய குகலீன் வெறும் 7 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது.

Newzealand Cricket Team
Newzealand Cricket Team

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்கத்திலேயே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்பு தவான் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசினார். பின்பு இவரும் 29 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோலியின் இடத்தில் களம் இறங்கிய தமிழக வீரர் விஜய் சங்கரும் சிறப்பாக விளையாடி 27 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடிய தவறினர்.

குறுகிய இடைவெளியில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். இறுதியில் தோனி மட்டும் நிலைத்து நின்று விளையாடி 39 ரன்களை அடித்தார். இந்திய அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 139 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி என்பது ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மிகச் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான செய்ஃபர்ட்- க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Kane Williamson
Kane Williamson

இந்நிலையில் 2வது டி-20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியை குறித்து கேன் வில்லியம்சன் சற்றுமுன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தது என்னவென்றால், நாங்கள் வெற்றி பெற்றது எங்களுக்கு முழு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி நல்ல பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் கடந்த சில போட்டிகளில் தடுமாறி வந்தோம். தற்போது அந்த சரிவில் இருந்து மீண்டு விட்டோம். தற்போது எங்கள் அணி உற்சாகத்திலும் ,சிறப்பான நிலையிலும் உள்ளனர். இதே உற்சாகத்துடன் நாளைய போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு கட்டாயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now