உலக கோப்பையை மனதில் வைத்து அனைத்து அணிகளும் பல வழிகளில் தயாராகி வருகிறது. அதில் இந்தியா மற்றும் விதிவிலக்கல்ல, உலக கோப்பை தொடரை முன்வைத்தே அனைத்து வீரர்களும் விளையாடி வருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், அதில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. ஆனால் தோனியின் நீக்கம் தான் இதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் காத்திருக்கிறது.
கிரிக்கெட்டில் பல நாடுகளில் பல வீரர்கள் விளையாடுகிறார்கள் அவர்கள் அனைவரும் ஜாம்பவானாக விளங்கியதில்லை. கிரிக்கெட்டில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு அதில் முத்திரை பதித்தவரே ஜாம்பவானாகத் திகழ்கின்றனர். அதில் ஒருவர் தான் நம் தல தோனி. இவர், கீப்பிங், மேட்ச் பினிசிங், கேப்டன்சிப் என அனைத்து பிரிவுகளிலும் தனித்திறமையை வெளிப்படுத்தி இன்று இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக உள்ளார்.
இந்தியாவில் சச்சினுக்கு அடுத்து பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பது தோனிக்கு தான்.இப்படி இருக்கையில் தோனியை அணியிலிருந்து நீக்கியது அவரது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரி,இவர் ஏன்அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை ஒரு தொகுப்பாக காண்போம்.
மேட்ச் பினிசிங்:
அவரது நீக்கத்திற்கு முதல் காரணம் இது தான். ஒரு அணிக்கு 10 ஓவர்களில் 40 ரன்கள் தேவை கைவசம் 3 விக்கெட்டுகள். இந்த சூழலில் ஒரு அனுபவசாலியாக ஆட்டத்தை வெற்றிகரமாக பதட்டமிலாமல் முடித்து விடுவார். ஆனால் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு சூழல் வருவது அரிது. 10 ஓவர்களில் 80 ரன்கள் கைவசம் அதே மூன்று விக்கெட்டுகள் என்றே வருகிறது, இதில் தான் தோனி சற்று தடுமாறுகிறார். அது சற்று கடினம் தான், ஆனால் தோனிஅதில் தானே வல்லவர்.
தோனியின் அறிமுகமே அதிரடி ஆட்டம் தான். ஆனால், இன்று அதில் தான் சற்று சருக்குகிறார். இறுதிகட்டத்தில் பவுன்சர்களாக வீசும் பந்துகளை அவரால் தற்போது சிக்ஸர் பவுண்டரிகளாக மாற்ற முடியவில்லை. இதனால் அவரால் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. இதுவே தோனியின் முதல் வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
மிடில் ஆர்டர்:
சரி, பினிசிங்கில் தான் தடுமாறுகிறார், நான்காம் வீரராக களமிறக்கினால் என்ன என்ற விவாதமும் எழுந்தது. பின்பு சில போட்டிகளில் நான்காவது வீரராக களமும் இறங்கினார்.அதிலும் ஒரு சிக்கல் வந்தது, அவர் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினாலும் ரன்கள் குவிக்க தடுமாறினார். சுழற்பந்து வீச்சாளர்களை சரியாக எதிர்கொள்ள முடியாமல் ஒன்று , இரண்டு ரன்களாக மட்டுமே எடுத்து வந்தார். பவுண்டரிகள் அடிக்க மிகவும் சிரமப்பட்டார். அதனால், அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகவும் சரிந்தது. இது பின்வரிசை வீரர்களை மிகவும் பாதித்தது.
இவை இரண்டும் தான் தோனியின் மிகபெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவர் இடத்திற்கு சற்று பொருத்தமான ரிஷப்பாண்டை தேர்வு செய்துள்ளனர்.
ரிஷப் பாண்ட்:
இவர் ஒரு அதிரடி ஆட்டக்காரர், ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி பல நேரங்களில் தனியாளாக வெற்றியடைய செய்துள்ளார். மேலும் இவர் ஒரு இளம் வீரர் ஆவார்.
ரிஷப்பாண்ட் தேர்வு செய்ததர்க்கு தோனியின் ஃபார்ம் மட்டுமே காரணம் அல்ல. தோனியின் குறிக்கோள் 2019 உலககோப்பையில் விளையாட வேண்டும் என்பதே .ஒருவேளை அந்ததொடருடன் அவர் ஓய்வு பெற்றால் 2020 ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்கு கீப்பர் பேட்ஸ்மேனை தேடுவது கடினமாகிவிடும். இரண்டிற்கும் இடையே குறைந்த காலஅவகாசமே உள்ளதால் போதிய பயிற்சிஅளிக்க முடியாமல் போகும். அதனை கருத்தில் கொண்டே தோனிக்கு பதிலாக ரிஷப் பாண்டை தேர்வு செய்துள்ளனர். மேலும் அந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்க விருப்பதால் இப்போது இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சற்று கைகொடுக்கும்.
சரி,அப்படி என்றால் ஒருநாள் போட்டிகளிலும் தோனிக்கு பதிலாக ரிஷப் பாண்டை தேர்வு செய்யலாமே என்று கேட்பதும் புரிகிறது. அவரை ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்குவது அவ்வளவு எளிதில்ல . காரணம் , அவரது அனுபவம் தான். கோலிக்கு கேப்டன்சிப்பில் சந்தேகம் வந்தால் அதை தீர்த்து வைக்கும் வலிமை தோனிக்கு மட்டுமே உள்ளது. அதைப் பற்றி கோலியே பலமுறை பேட்டிகளில் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது தோனியின் விக்கெட் கீப்பங் மிகவும் சிறப்பு வாய்ந்தது, அதிலும் ஸ்டம்பிங் செய்வதில் மிகபெரிய கில்லாடி தோனிக்கு நிகர் தோனி தான். இதன் காரணமாகவே ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்குவது கடினமாகும்.
கபில்தேவ் பேட்டி:
இவரைப் பற்றி கபில்தேவ்அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது,”தோனி இந்தியாவின் சொத்து, அவரை என்றும் பிரிக்க முடியாது. ஆனால் அவர் 20 வயது இளைஞரல்ல அதனால் அவரிடம் அதிகம் எதிர்பார்ப்பது கூடாது. அவருக்கு உண்டான இடத்தையும், மரியாதையும் நாம் தான் தர வேண்டும்”.
அவர் கூறியுள்ளது போல் அவர் 20 வயது இளைஞரல்ல என்றாலும் அவரது உடல் தகுதிக்கு முன்னாள் எந்த 20 வயது வீரர்களும் தாக்குபிடிக்க முடியாது என்பது அவரின் ரசிகர்களின் கருத்தாகும்.