பாகிஸ்தான் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது போட்டி இன்று துபாய் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ஷோயிப் மாலிக் தலைமையிலான முல்டான் சுல்தான் அணியும், இமாட் வாசிம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணிகளும் மோதின. இதில் டாஸ் வென்ற முல்டான் சுல்தான் அணியின் கேப்டன் ஷோயிப் மாலிக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி கராச்சி கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களான லிவிங்ஸ்டொன் மற்றும் பாபர் அஸாம் களமிறங்கினர். இருவரும் முல்டான் சுல்தான் அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அணிக்கு நல்ல துவக்கம் தந்தனர். இந்த இருவரும் சேர்ந்து 15 ஓவர் வரை விக்கெட் எதுவும் இழக்காமல் 150 ரன்கள் குவித்தனர். சிறப்பாக ஆடிவந்த லிவிங்ஸ்டோன் 43 பந்துகளில் 82 ரன்கள் குவித்த நிலையில் க்ரிஷ் க்ரீன் வீசிய பந்தில் ரசெலிடம் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய இன்ங்கிராம் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் இமாட் வாசிம் 4 ரன்களில் க்ரிஷ் க்ரீன் பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி வந்த பாபர் அஸாம் 77 ரன்களில் க்ரிஷ் க்ரீன் பந்தில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 183 ரன்கள் குவித்தது. கராச்சி கிங்ஸ் அணி கடைசி 21 ரன்களில் மட்டும் 6 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. முல்டான் சுல்தான் அணி சார்பில் க்ரிஷ் க்ரீன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இல்க்கை நோக்கி முல்டான் சுல்தான் அணி களமிறங்கியது. அந்த அணி சார்பில் துவக்க வீரர்களாக மாசூட் மற்றும் டாம் மோரிஸ் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே டாம் மோரிஸ் ஒரு ரன்னில் அமீர் பந்தில் ஆட்டமிழந்தார்.பின்னர் ஏவான்ஸ் களமிறங்கி கராச்சி அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரியாக விளாசினார். மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த மாசூட் 20 ரன்களில் இருந்த போது உஸ்மான் கான் வீசிய பந்தில் அமீரிடம் கேட்ச் ஆனார்.
அடுத்தாக அணியின் கேப்டன் ஷோயிப் மாலிக் களமிறங்கினார். ஷோயிப் மாலிக் ஏவான்ஸ் உடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 124 ஆக இருந்த போது ஏவான்ஸ் 49 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய அவர் ஒரு ரன்னில் அரைசதத்தை இழந்தார். பின்னர் வந்த அதிரடி ஆட்டக்காரரான ரஸ்ஸெல் 9 ரன்களில் அமீர் பந்தில் ஆட்டமிழக்க அடுத்த ஓவரிலேயே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஷோயிப் மாலிக் 52 ரன்களில் உஸ்மான் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாகித் அப்ரிடி 14 ரன்களிலிலும், அஸாம் 12 ரன்களிலும் வெளியேற கடைசியில் அந்த அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஷோகில் கான் வீசினார். அந்நிலையில் களத்திலிருந்த க்ரிஷ் க்ரீன் முதல் இரண்டு பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார். 4 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே முகமது லயாஸ் ஆட்டமிழந்து வெளியேறினார். இர்பான் கடைசி இரண்டு பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே அடிக்க கராச்சி அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பாக பந்துவீசிய அமீர் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதினைப் பெற்ற