தோனி ஸ்டம்பிற்கு பின்னால் நின்றால் சொந்த ஊரில் விளையாடுவது போல் உணர்வு – எனக் கூறும் இந்திய வீரர்

Pravin
Dhoni and Kedar Jadav
Dhoni and Kedar Jadav

இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்க்கொண்டு ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற கண்க்கில் தொடரை வென்று கோப்பையும் கைபற்றியது இந்திய அணி. இதனை அடுத்து மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் நாளை விளையாட உள்ளது. இந்த நிலையில் கடைசியாக விளையாடிய ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வீத்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பவுலிங் செய்த போது தோனி நீஷமை ரன் அவுட் செய்த விடியோ தற்போழுது சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்போதும் பந்துவிச்சளர்களுக்கு அவர்கள் தவறு செய்யும் போது சிறு சிறு அட்வைஸ் செய்வது வழக்கம். அவர் சொல்லும் ஐடியாக்களும் பல நேரங்களில் உதவியாக இருக்கும். இந்த தொடரில் ஏற்கனவே கேதர் ஜாதவ் தனது பந்துவிச்சு பற்றி கூறிய போது தோனி என்ன சொன்னாலும் அதை தான் செய்வேன் , தோனி சொல்லும் இடத்தில் பந்துவிசுவேன். அதுவே எனது பந்து விச்சின் ரகசியம் என்று கூறினார்.

அந்த வகையில் முன்னதாக நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பவுலிங் செய்த போது தோனி கேதர் ஜதாவிடம் பேசிய உரையாடல் இப்போழுது வைரல் ஆகி உள்ளது. பொதுவாக இந்திய அணி வீரர்கள் வெளிநாடுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடும் போது எதிரணி வீரர்களுக்கு புரியக்கூடாது என்பதற்காக ஹிந்தியில் பேசுவது வழக்கம். ஆனால் ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் கேதர் ஜாதவ் 39 வது ஓவரை வீசிய போது தோனி கேதர் ஜாதவின் தாய் மொழியான மாரத்தி மொழியில் பேசினார். தோனி ஜாதவிடம் “ மீண்டும் மீண்டும் அதே போன்று வீசாதே அவரின் விக்கெட்டை வீழ்த்து கேதர் “ என்று பேசியது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகி உள்ளது.

தோனி – கேதர் ஜாதவ் உரையாடல் சமுக வலைதளங்களில் பெரிதும் வைரல் ஆனது இந்த செய்தி பத்திரிகை ஒன்றிலும் வெளியானது. இதனை கேதர் ஜாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த கேதர் ஜாதவ் அவர் பதிவிட்ட டுவிட்டில் “ தோனி மாரத்தியில் பேசியது பெரிய சர்ப்ரைஸ் ஆக எனக்கு இருந்தது. வெளிநாட்டில் விளையாடினாலும். தோனி ஸ்டம்புக்கு பின்னால் நின்றால் , சொந்த ஊரில் விளையாடுவது போன்று உணர்வு இருக்கும்" என கேதர் ஜாதவ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். கேதர் ஜாதவ் முதன் முதலில் பவுலாராக மாற்றியவர் தோனி. தோனி கேப்டனாக இருந்த போது தான் கேதர் ஜாதவ் பவுலிங்கில் கவனம் செலுத்தினார். இப்போழுது அவர் இந்திய அணியில் இருபதற்கு அவர் ஒரு வீத பவுலராக இருப்பதால் தான் அணியில் இடம் அளிக்கபடுகிறது. கேதர் ஜாதவ் தற்போழுது சிறந்த ஆல்ரவுன்டராக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

Quick Links

Edited by Fambeat Tamil