ஐ.பி.எல்-2019: பெங்களூர் அணியின் 3 முக்கிய வீரர்கள்

ஐ.பி.எல் இந்த தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்பில் விராத் கோலி
ஐ.பி.எல் இந்த தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்பில் விராத் கோலி

ஐ.பி.எல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. இந்திய அணி கேப்டன் விராத் கோலி இதுவரை கேப்டனாக இருந்து ஐ.பி.எல் தொடரில் வெற்றி பெறவில்லை என்பது ஆர்.சி.பி ரசிகர்களுக்கு வருத்தமான ஒன்று. ஆனால், இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் கோலி தலைமையில் ஆர்.சி.பி அணி புது பொலிவுடன் களமிறங்குகிறது. அதிரடி ஆட்டக்காரர்கள், சிறந்த ஆல்-ரவுண்டர்கள், மிரட்டும் வேகப்பந்து வீச்சாளர்கள் என அணியைச் சிறப்பாக வைத்துள்ளனர். பெங்களூர் அணியில் பலமாக இருப்பது உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்களான மார்கஸ் ஸ்டோனிஸ், காலின் டி கிராண்ட்ஹோம், மோயீன் அலி ஆகியோரும் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சிவம் டூபே மற்றும் பவன் நேகி உள்ளிட்டோர் அணியில் முக்கிய பங்கு வைப்பார்கள்.

#3 மார்கஸ் ஸ்டோனிஸ்

சிறந்த ஃபார்ம் கொண்டு பிக் பாஷ் தொடரில் கலக்கி வருகிறார் ஸ்டோனிஸ்
சிறந்த ஃபார்ம் கொண்டு பிக் பாஷ் தொடரில் கலக்கி வருகிறார் ஸ்டோனிஸ்

மார்கஸ் ஸ்டோனிஸ் தற்போது ஆஸ்திரேலியாவின் சிறந்த ஆல்-ரவுண்டராக இருந்து வருகிறார். கடந்த ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து மார்கஸ் ஸ்டோனினியை ஆர்.சி.பி அணி இந்த ஆண்டு பெற்றது. 29 வயதான மார்கஸ் ஸ்டோனிஸ் ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார். அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு அணியை பலப்படுத்தும். மார்கஸ் ஸ்டோனிஸ் ஐ.பி.எல் தொடரில் இதுவரை 19 போட்டிகளில் 23.81 சராசரி மற்றும் 262 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 125.96 எடுத்துள்ளார். பந்துவீச்சில் 13 விக்கெட்கள், சராசரி 32.61, சிறந்த பந்துவீச்சாக 15 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் பிக் பாஷ் லீகில் ஆல்-ரவுண்டராக கலக்கி வருகிறார். இந்த சீசனில் இதுவரை ஸ்டோனிஸ் 10 போட்டிகளில் 427 ரன்கள் மற்றும் 63.14 சராசரி. ஸ்ட்ரைக் ரேட் 135.17 எடுத்தார். பந்துவீச்சில் 14.07 என்ற சராசரியில் 14 விக்கெட்களை எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் ஸ்டோனிஸ் தனது ஃபார்ம் தொடர வேண்டும் என்று ஆர்.சி.பி அணி எதிர்பார்க்கும்.

#2 சிம்ரான் ஹெட்மியர்

சிம்ரான் ஹெட்மியர்
சிம்ரான் ஹெட்மியர்

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இளம் வீரர்களில் ஒருவரான சிம்ரான் ஹெட்மியர் ஐபிஎல் 2019-ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக விளையாடுவார். வெஸ்ட் இண்டீஸ் அண்டர்-19 அணி 2016-ஆம் ஆண்டு கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 2016-ஆம் ஆண்டுக்கான அண்டர்-19 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒரு வருடத்திற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அவர் அறிமுகமானார். டி-20 போட்டிகளில் நன்றாக விளையாடினார். சிம்ரான் ஹெட்மியர் கரீபியன் பிரிமியர் லீக் 2018-ஆம் ஆண்டு ஒரு வெற்றிகரமான தொடராக இருந்தது. 12 போட்டிகளில் 440 ரன்கள், 40.00 சராசரி, ஸ்ட்ரைக் ரேட் 148.14 கொண்டு சிறப்பாக விளையாடினார். 22 வயதான ஹெட்மியர் இதுவரை 21 டி-20 போட்டிகளில் 517 ரன்கள் எடுத்துள்ளார். ஐ.பி.எல் சீசனில் ஆர்.சி.பீ அணிக்கு ஒரு சிறந்த இடது கை பேட்ஸ்மேன்னாக நிச்சயம் இருப்பார்.

#1 ஏ.பி. டி வில்லியர்ஸ்

கிரிக்கெட்டின் சூப்பர்மேன் என்று அழைக்கப்படும் ஏ.பி.டி வில்லியர்ஸ் ஐ.பி.எல் 2019-ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணிக்கு மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக இருப்பார். ஏனெனில் அவர் தனி ஒருவராக இருந்து பல போட்டிகளில் அணியை வெற்றிபெற வைத்துள்ளர். ஐ.பி.எல் கடந்த சீசனில் 12 போட்டிகளில் 480 ரன்கள், 53.33 சராசரி, ஸ்ட்ரைக் ரேட் 174.54 கொண்டு இருந்தார். இந்த தொடரிலும் அதே ஃபார்ம் கொண்டு சிறப்பாக விளையாடுவார் என்று ஆர்.சி.பி அணி விரும்புகிறது.

MR.360
MR.360

ஏ.பி.டி வில்லியர்ஸ் ஐ.பி.எல் தொடரில் இதுவரை 129 இன்னிங்ஸில் 28 அரைசதங்கள் மற்றும் 3 சதங்கள் உட்பட 39.53 சராசரி, 3953 ரன்கள், 150.94 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் விடைபெற்ற பிறகு, மிஸ்டர் 360 எனப்படும் ஏ.பி.டி வில்லியர்ஸ் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடினார். 6 போட்டிகளில் 61.75 சராசரி, 168.02 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 247 ரன்கள் எடுத்தார். வரும் ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணிக்கு முக்கிய வீரராக இருப்பார்.

எழுத்து-அப்துல் ரஹ்மான்

மொழிபெயர்ப்பு-சுதாகரன் ஈஸ்வரன்

Edited by Fambeat Tamil