2019 கரேபியன் பிரிமியர் லீக் தொடரில் டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட கீரன் பொல்லார்ட்

Kieron Pollard To Play For Trinbago Knight Riders In CPL 2019
Kieron Pollard To Play For Trinbago Knight Riders In CPL 2019

7 வது கரேபியன் பிரிமியர் லீக் சீசனில் அனுபவ வீரர் கீரன் பொல்லார்ட் தனது நகர அணியான டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிபிஎல் டி20 வரலாற்றில் பொல்லார்ட் மட்டுமே டிரினிடாட் தொடர்பான அணிகளுக்கு மட்டுமே விளையாடி வருகிறார். முதல் 5 சிபிஎல் தொடரில் பார்படாஸ் டிரைடேன்ட்ஸ் அணிக்காக விளையாடி வந்த கீரன் பொல்லார்ட் கடந்த சிபிஎல் தொடரில் ஸ்டே. லுசியா ஸ்டார் அணிக்காக விளையாடி வந்தார்.

தற்போது 7 வது சிபிஎல் சீசனில் புதிய அணிக்காக விளையாட உள்ளார். இவ்வருட சிபிஎல் சீசனில் டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியின் மிகுந்த அனுபவ வீரராக பொல்லார்ட் உள்ளார். மே 22 அன்று நடைபெறவுள்ள சிபிஎல் ஏலத்தில் மற்ற அணி வீரர்களின் விவரங்கள் தெரியவரும். கீரன் பொல்லார்ட் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மெதுவாக தனது வெற்றிக் கணக்கை துவங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் தொடரின் மிடில் சீசனில் பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. தற்போது தகுதிச் சுற்றிலும் வென்று இறுதிப்போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் சென்றுள்ளது. இவ்வருட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் நோக்கில் மும்பை அணி உள்ளது. பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா மிடில் ஆர்டரில் மும்பை அணியின் தூணாக திகழ்கிறார்.

டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் கீரன் பொல்லார்ட் பற்றி தெரிவித்துள்ளதாவது:

டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியின் இயக்குநர் மைசூர் வென்கி உள்ளூர் அதிரடி வீரரை தங்கள் அணிக்கு வரவேற்பதாகவும், பொல்லார்ட் அணியில் விளையாடுவதனை மகிழ்ச்சிகரமாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

" கீரன் பொல்லார்டை மீண்டும் தனது சொந்த மண்ணிற்கு வரவேற்கிறேன். மேலும் பல டிரினிடாட் உள்ளூர் வீரர்களை அணிக்கு கொண்டு வர முயற்சி செய்வேன்.

மேலும் வென்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

செப்டம்பர் 4 அன்று நடைபெறவுள்ள டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியின் முதல் போட்டியில் டிரிபாங்கோ வண்ணத்தில் கீரன் பொல்லார்ட் களமிறங்குவார். இதனால் ரசிகர்கள் எழுப்பும் அரவாரத்தை காண மிகுந்த ஆவலாக உள்ளேன்.

கடந்த கால சிபிஎல் தொடரில் டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியின் பல்வேறு வெற்றிகளை பொல்லார்ட் கவணித்துள்ளார். பெரும்பாலும் டிரினிடாட் தொடர்பான அணிகளே சிபிஎல் தொடரை வெல்லும். முதல் 6 சிபிஎல் தொடரில் 3 தொடரை டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பொல்லார்ட்-ற்கு சிபிஎல் தொடரை எவ்வாறு கையாள வேண்டும் என்ற நுணுக்கம் நன்றாகவே தெரியும். 2014 சிபிஎல் தொடரில் டிரைடென்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட் செயல்பட்டபோது அந்த அணி சிபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

மேற்கிந்தியத் தீவுகளின் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட் அதிக அனுபவ டி20 வீரராக திகழ்கிறார். இவர் இதுவரை 474 டி20 போட்டிகளில் பங்கேற்று 9275 ரன்கள் மற்றும் 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Edited by Fambeat Tamil