இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். நேற்று ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் பெங்களுரு அணி தோல்வி அடைந்தால் இந்த ஐபிஎல் சீசனில் இருந்து ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழந்து விடும் என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் பெங்களுரு அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் வீராட் கோலி மற்றும் பார்த்திவ் படேல் இருவரும் களம் இறங்கினர். பார்த்திவ் படேல் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அவுட் ஆக கேப்டன் வீராட் கோலி நிலைத்து விளையாடினார். அடுத்து வந்த அக்ஷிதிப் நாத் 13 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் வந்த மோயின் அலி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். கோலி உடன் இணைந்து சிக்ஸர் மழை பொழிந்தார் மோயின் அலி. 28 பந்தில் 6 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் வீளாசி 66 ரன்கள் குவித்தார் மோயின் அலி.
மூன்றாவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 90 ரன்கள் குவித்த நிலையில் குல்திப் யாதவ் வீசிய 16 ஓவரில் 4,6,4,6,6 என்று 26 ரன்கள் குவித்து அதே ஓவரில் கடைசி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் விஸ்வருபம் எடுத்த வீராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி ஐபிஎல் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களுரு அணி 213- 4 ரன்களை குவித்தது.
அதன் பின்னர் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் சுனில் நரைன் மற்றும் கிறிஸ் லிண் இருவரும் களம் இறங்கிய நிலையில் கிறிஸ் லிண் டேல்ஸ் ஸ்டைன் ஓவரில் 1 ரன்னில் அவுட் ஆகினார். அடுத்து வந்த சுக்மான் கில் 11 ரன்னிலும் சுனில் நரைன் 18 ரன்னிலும் அவுட் ஆக கொல்கத்தா அணி 33-3 என்ற நிலைக்கு சென்றது. அடுத்து வந்த நிதீஸ் ராணா நிலைத்து விளையாட ராபின் உத்தப்பா 9 ரன்னில் அவுட் ஆகினார்.
அவரை தொடர்ந்து களம் இறங்கிய அதிரடி வீரர் ரஸல் ராணா உடன் இணைந்து சிக்ஸர் மழை பொழிந்த நிலையில் மறுமுனையில் ராணா தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். 15வது மற்றும் 19வது ஓவர்களில் இரண்டு முறை ஹாட்-ரிக் சிக்ஸர் வீளாசி அசத்தினார் ரஸல்.
கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராணா முதல் இரண்டு பந்தில் 1 ரன் மட்டும் எடுக்க அடுத்த பந்தில் ரஸல் சிக்ஸர் அடித்து ஆட்டத்தில் விறுவிறு கூடிய நிலையில் அடுத்த பந்தை மோயின் அலி சிறப்பாக வீசிய நிலையில் வெற்றி வாய்ப்பினை இழந்தது கொல்கத்தா அணி. பெங்களுரு அணி 10 ரன்கள் வித்தியாச்தில் வெற்றி பெற்றது. ராணா 85, ரஸல் 65 ரன்கள் வீளாசினர். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக வீராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.