கே.எல் ராகுலுக்கு 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச தொடர்கள் எதுவுமே சிறப்பானதாக அமையவில்லை. ஐபிஎல் 2018 கே.எல் ராகுலுக்கு சிறப்பானதாக இருந்தது.ஆனால் அதன்பிறகு விளையாடிய சர்வதேச தொடர்கள் எதிலுமே கே.எல் ராகுல் அவ்வளவாக ஜொலிக்கவில்லை.
இவருடைய பேட்டிங் சீராக இல்லாததால் இந்திய ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களை மிகவும் எரிச்சலடையச் செய்துள்ளது. இவருடைய பேட்டிங் மோசமாக இருந்தும் எப்படி இந்திய அணியில் இடம்பெறுகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் உள்ளனர். தற்பொழுது சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் கே.எல். ராகுல் 18 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 3 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டமிழந்துள்ளார். இது மேன்மேலும் இந்திய ரசிகர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.
ஐபிஎல்-இல் கே.எல் ராகுல் நன்றாக விளையாடி தமது பேட்டிங் திறனை வெளிப்படுத்தினர். அத்துடன் இவரிடமிருந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஐபிஎல்- இல் தன்னை நிறுபித்ததால் இங்கிலாந்து தொடரில் டெஸ்ட், ஓடிஐ , டி20 என 3 அணிகளிலுமே கே.எல் ராகுல் இடம்பிடித்தார்.
இங்கிலாந்து தொடரின் முதல் டி20 யில் சத்தத்தை விளாசினார். ஆனால் அதற்கு பிறகு நடைபெற்ற 2 டி20, 3 ஓடிஐ, 5 டெஸ்ட் போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 5 வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் மட்டும் 149 ரன்களை விளாசினார். ஆனால் அப்போது இந்தியா ஏற்கனவே தொடரை இழந்திருந்தது.
இவர் இந்திய ரசிகர்களால் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் அத்துடன் கே.எல் ராகுல் விளையாட்டில் சரியாக கவணம் செலுத்தி விளையாடுவதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர் இந்திய ரசிகர்கள்.
இவர் தொடக்க ஆட்டக்காரராக ஆரம்ப காலங்களில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால் ராகுலின் தற்போதைய ஆட்டம் அவ்வாறு அமையாத காரணத்தால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.
ராகுல் ஆசியக்கோப்பையில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆப்கானிஸ்தானிற்கெதிரான அப்போட்டியில் அதிரடியாக விளையாடி 60 ரன்களை குவித்தார். ஆனால் அப்பொழுதும் அவர் விமர்சிக்கப்பட்டார் ஏனெனில் அப்போட்டியில் ராகுல் செய்த மோசமான ஃபில்டிங்கால் டிரா ஆனது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு தொடரிலும் ராகுலின் மோசமான ஆட்டம் தொடர்ந்தது. அவர் இரு டெஸ்ட் போட்டியில் விளையாடி மொத்தமாக 37 ரன்களும், 3 டி20 போட்டிகளில் விளையாடி 59 ரன்கள் மட்டுமே அடித்தார்.
அத்துடன் ஆஸ்திரேலியாவிற்கெதிரான டி20 தொடரிலும் 2 டி20 போட்டிகளில் விளையாடி 27 ரன்களை மட்டுமே அடித்தார். இதனால் இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கிரிக்கெட் வள்ளுநர்களும் சமூக வலைத்தளங்களில் ராகுலின் மோசமான ஆட்டத்தை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் வீரர் சஞ்சய் மாஜ்ரேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் கே.எல் ராகுலின் பேட்டிங் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
ராகுலின் மோசமான ஆட்டம் ஆஸ்திரெலியாவில் இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்திலும் தொடர்ந்ததால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். பயிற்சி ஆட்டத்தில் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் அரை சதமடித்திருக்கும் நிலையில் இவர் மட்டும் ஒற்றை இலக்கத்தில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். இதனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ராகுலின் பேட்டிங்கை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த டிவிட்டர் பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
கே எல் ராகுல் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி அணியை அருமையாக வெற்றியடையச்செய்துள்ளார். ஆனால் அவரிடம் தற்போது சீரான ஆட்டத்திறன் இல்லை. பயிற்சி ஆட்டத்தில் சொதப்பியதால் டிசம்பர் 6 ஆம் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் XIல் ராகுலின் இடம் சற்று சந்தேகம் தான்.
தற்போது உள்ள சூழ்நிலையில் இளம் கிரிக்கெட் வீரர்கள் போட்டிபோட்டு கொண்டு சர்வதேச அணிகளில் இடம்பிடிக்க உள்ளுர் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி காத்துக்கொண்டு உள்ளனர். மயன்க் அகர்வால், ஸ்ரேயஸ் ஐயர் போன்றோர் லிஸ்ட் - ஏ கிரிக்கெட்டில் சிறப்பான பேட்டிங் சராசரியை வைத்துள்ளனர். தற்பொழுது புதிதாக டெஸ்ட் அணிகளில் அறிமுகமாகியுள்ள விஹாரி மற்றும் பிரித்வி ஷா தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.