எதிர்வரும் உலகக் கோப்பையில் கே.எல்.ராகுல் எந்த பேட்டிங் வரிசையில் களமிறங்குவார் என்று இன்னும் திட்டமிடவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சமீபத்திய ஆட்டத்தை வைத்து பார்க்கும் போது உலகக் கோப்பையில் கே.எல்.ராகுல் ஆடும் XI-ல் இடம்பெறம் வாய்ப்பு மிக குறைவு. ஷீகார் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக களமிறங்குவர். நம்பர்-4ல் யார் களமிறங்குவார் எனத் தெரியவில்லை. ஆனால் கே.எல்.ராகுல் இந்த இடத்திற்கு போட்டியாளராக இல்லை. தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கரை நம்பர்-4ல் களமிறக்கப்பட்டால் கே.எல்.ராகுல் ஆடும் XI-ல் இடம்பெற இயலாது.
தற்போது மிடில் ஆர்டர் பேட்டிங் நுணுக்கங்களை தான் நன்கு அறிந்துள்ளதாகவும், எந்த பேட்டிங் வரிசையிலும் தான் களமிறங்க தயராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ராகுல். மாற்று தொடக்க ஆட்டக்காரராகவே இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள ராகுல், கடந்த காலங்களில் மிடில் ஆர்டரில் வாய்ப்பளிக்கப்பட்டு, பேட்டிங் செய்துள்ளார்.
கே.எல்.ராகுல் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு தெரிவித்தவதாவது:
இந்திய தேர்வுக்குழு ஒரு சரியான முடிவுடனேயே என்னை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்துள்ளனர். இந்திய அணி நிர்வாகம் என்னை எந்த இடத்தில் களமிறக்க முடிவு செய்தாலும் அந்த வரிசையில் களமிறங்கி என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.
சர்சையில் சிக்கிய பிறகு கே.எல்.ராகுல் தனது பேட்டிங்கை பன்மடங்கு மேம்படுத்தியுள்ளார். கே.எல்.ராகுல் இந்திய-ஏ அணியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஓடிஐ மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றார். இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் 50 ரன்களும் 2வது போட்டியில் 47 ரன்களையும் விளாசினார். 2019 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக 53.90 சராசரியுட்ன 593 ரன்களை குவித்து இவ்வருட ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
"தன்னுடைய ஆட்டத்திறன் தற்போது மிகவும் சிறப்பாக உள்ளது. கடைசி இரு மாதங்களாக என்னுடைய சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தியுள்ளேன். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான உள்ளூர் போட்டி என்னுடைய ஆட்டத்திறனின் மீது அதிக கவனம் செலுத்த என்னை தூண்டியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஐபிஎல் தொடர்களில் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளேன். இது எனக்கு முழு நம்பிக்கையை அளித்துள்ளது."
2019 உலகக் கோப்பை மே 30 அன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்க உள்ளது. இந்திய அணி 23ஆம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது. கேதார் ஜாதவ் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது தற்போது வரை கேள்விக் குறியாக உள்ளது. இவரது பேட்டிங் வரிசையில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்க அதிக வாய்ப்புள்ளது.
இந்திய அணி உலகக் கோப்பையில் தனது முதல் தகுதிச் சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஜீன் 5 அன்று மோத உள்ளது.