இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் டாஸ் வென்று பேட்டிங் இறங்கியது. முதல் ஒருநாள் போட்டியை போலவே 2வது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், புவனேஸ்வர் குமார் பந்தில் போல்டானார்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மார்ஷ் கடந்த 6 மாதங்களில் தனது 4 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் வந்த வீரர்களின் அதிரடி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 298 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
299 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் இந்தப் பெரிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான் மற்றும் ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம் கொடுத்தனர். பின்னர் வழங்கிய விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தனது விக்கெட்டை விடக்கூடாது என்ற எண்ணத்தில் மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். அரை சதத்தை 66 பந்துகளில் பூர்த்தி செய்தார். இதில் வெறும் இரண்டு பவுண்டரிகள் மட்டுமே அடங்கும. வழக்கமாக கிரிக்கெட்டில் அரை சதம் அடித்தால் பேட்டை உயர்த்தி காண்பிப்பது வழக்கம். ஆனால் கோலி அரைசதம் அடித்த பின்பும் அந்த மாதிரி எந்த ஒரு செயலையும் செய்யவில்லை. அவரின் முழு கவனமும் இலக்கை நோக்கி செல்வதில் இருந்தது. பின்பு அபாரமாக ஆடிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 39- வது சதத்தை அடித்தார் சேஸிங்கில் அவர் அடித்த 24 வது சதம் இதுவாகும்.
குடிநீர் இடைவேளைக்குப்பின் விராட் கோலி 104 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தோனியுடன் தினேஷ் கார்த்திக் இணைந்தார். கடந்த போட்டியில் 96 பந்துகளில் 51 ரன்கள் அடித்த ஆட்டத்தை குறித்து அனைவரும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த போட்டியில் தோனி தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி கோலி விக்கெட்டை இழந்த பொழுது ஒருபுறம் தினேஷ் கார்த்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தனது வழக்கமான நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் அடித்தார். அந்த சிக்ஸர் மூலம் அவர் அரை சதத்தை பூர்த்தி செய்தார். அரை சதம் அடித்த தோனி தினேஷ் கார்த்திக்கும் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் தினேஷ் கார்த்திக் தோனியிடம் அவர் அரை சதத்தை பூர்த்தி செய்தார் என்று நினைவூட்டினார். அதன்பின் தோனி தனது பேட்டை ரசிகர்களை நோக்கி உயர்த்தினார். போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர் சமனானது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.