இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் 1990 ஆம் ஆண்டிற்க்கு பிறகு மலர்ந்தது. கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான அணி அதைத் தொடங்கி வைத்தது. எம்.எஸ்.தோனி கேப்டனாகப் பதவி ஏற்று அணியை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றார். இருவரும் பாணியில் வித்தியாசமாக இருந்தனர். ஆனால், அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகச் செயல்பட்டனர்.
இரு தலைவர்களுக்கிடையில் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் உள்ளன.
#3 விளையாட்டு அணுகுமுறை:
தனது ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் எம்.எஸ்.தோனி தனது வாழ்க்கையில் ஒரு சில வருடங்களை இந்திய அணிக்கு வழி வகுத்தார். அவர் ஒரு பேட்ஸ்மேனாக வளர்ந்தார், அவரது விக்கெட் கீப்பிங் திறமையை மென்மையாக்கி, தலைமைத்துவ கலைகளை மாற்றியிருந்தார்.
கிரிக்கெட் விளையாட்டை அணுகியதில் தோனி கிட்டத்தட்ட அசாதாரணமானவராக இருந்தார். அவர் விளையாடிய முறையில் அவர் மனதளவில் அமைதியுடன் இருந்தார். எனவே, புனைப்பெயர் 'கேப்டன் கூல்'.
மாறாக, கோஹ்லி, தொடக்கத்தில் அவர் தனது முழுத்திறமைகளை வெளிப்படுத்தினார். இதை அவர் உணர்த்துவதற்கு எந்த நேரமும் எடுத்துக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, அவர் பெருமைக்குரிய ஒரு இடத்தை நோக்கிக் கிரிக்கெட்டை தொடர்ந்தார். ஒரு தலைவர் மற்றும் பேட்ஸ்மேனாக, அவர் இரக்கமற்றவர். அவரது அணுகுமுறை ஆக்கிரமிப்பு, மோதல் ஆகியவற்றை கொண்டது.
#2 எதிர்ப்பை அதிகப்படுத்துதல்:
தோனி தனது கலையைத் திறமையாக வெளிப்படுத்த இந்திய கிரிக்கெட் ஒரு முக்கிய பங்காக அமைந்தது. சிக்ஸ் அடிப்பதில் தோனி தனது திறமையை ஏராளமான முறை வெளிப்படுத்தியுள்ளார். தோனியின் சுய நம்பிக்கை, ஆற்றல் வேறு எந்தக் கிரிக்கெட் வீரரிடத்தும் வரவில்லை.
கோஹ்லி மறுபுறம், போட்டியின் தன்மையைப் பொறுத்து அடுத்த நிலைக்குக் கொண்டு செல்பவர். 3 ஆம் அல்லது 4 ஆம் விக்கெட்டிற்க்கு களமிறங்கி அணியை அவர் செயல்திறன் மூலம் முன்னிருந்து வழிநடத்தினார். அவர் பெரிய ஸ்கோர் அடிப்பதில் கவனம் செலுத்துகிறார், வாய்ப்பு எதையும் விட்டுவிட என்றும் அவர் விரும்புவதில்லை.
#3 உணர்வுகள்:
தோனி தனது உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டவில்லை, ஒரு தலைவராக அவரைப் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. அவர் கடுமையான கிரிக்கெட் உணர்வு கொண்டவராக இருந்தார். எனவே எதிர் அணிகளுக்கு அவரின் மனதை புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருந்தது. இந்தக் குறிப்பிட்ட சிறப்பம்சம் அவருக்கு ஒரு பெரிய நன்மைகளை அளித்தது. ஆனால் கோஹ்லி எதிர்மாறானவர். அவர்கள் சூழ்நிலையைப் பொறுத்து, சில நிமிடங்களுக்குள் அவரைக் கோபமாகவும், பின்னர் நகைச்சுவையாகவும் பார்க்கிறார்கள். அவர் மிகவும் சிறந்த நுணுக்கங்களையும், தனது தலைமைத்துவ திறன்களையும் மேம்படுத்த ஆர்வமாக உள்ளார். அவரைப் பொறுத்தவரை, இதுவே அவர் முன்வழியிலிருந்து வழிநடத்தி, மற்றவர்களுக்கு உதாரணமாக அமைய உதவியாக இருக்கிறது.
இருவரும் அதே சமயம் சில ஒற்றுமைகளை பகிர்ந்து இருந்தனர். கிரிக்கெட் மீதான அவர்களின் விருப்பத்திற்கு, வேறு எதுவும் ஈடு இணை இல்லை. மேலும் அசாதாரணமான நிகழ்வுகளை தொடர்ச்சியாக உருவாக்கி வந்தனர்.
.#4 ஒற்றுமைகள்:
இருவரின் தலைமை காலங்களில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இருவரும் இருவேறான தலைமைத்துவ பண்புகள் கொண்டிருந்தாலும், அணியை வெற்றி பெற வைப்பதில் பல ஒற்றுமையான பண்புகள் நிறைந்திருந்தன.
தோனி மற்றும் கோஹ்லி இருவரும் புதிய திறமையை வளர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள். அணியையும், தன்னையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராக உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும், தங்கள் அணியினர் மற்றும் எதிர் அணி வீரர்களிடமிருந்து கற்றுக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் செயல்களைச் சரியாகச் செய்து பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்ற கடமை உணர்ச்சி உள்ளவர்கள்.
இருவரும் இந்திய கிரிக்கெட்டில் ஒரு முக்கிய அங்கம் ஆகிவிட்டனர். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களாக உள்ளனர். தோனி 'குரு' என்றால், பின்னர் கோலி சரியான ‘சீடர்’ என்று மாறிவிட்டார். நாம் அதே துருவத்தில் இருவரையும் கொண்டாடுகிறோம்.
கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் தோனி தலை சிறந்த தலைவராக இருந்து, இந்திய கிரிக்கெட்டை அதிக உயரத்திற்கு எடுத்துச் சென்றார். விராட் கோஹ்லியின் திறமை கண்டு கேப்டன் பதவி ஒப்படைக்கபட்டது. கோஹ்லி, ஒரு கேப்டனாக, இப்போது இந்திய கிரிக்கெட்டை அதன் உச்சகட்டத்திற்க்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
எழுத்து: பிரவிர் ராய்
மொழியாக்கம் : நிவேதா