.#4 ஒற்றுமைகள்:
இருவரின் தலைமை காலங்களில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இருவரும் இருவேறான தலைமைத்துவ பண்புகள் கொண்டிருந்தாலும், அணியை வெற்றி பெற வைப்பதில் பல ஒற்றுமையான பண்புகள் நிறைந்திருந்தன.
தோனி மற்றும் கோஹ்லி இருவரும் புதிய திறமையை வளர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள். அணியையும், தன்னையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராக உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும், தங்கள் அணியினர் மற்றும் எதிர் அணி வீரர்களிடமிருந்து கற்றுக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் செயல்களைச் சரியாகச் செய்து பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்ற கடமை உணர்ச்சி உள்ளவர்கள்.
இருவரும் இந்திய கிரிக்கெட்டில் ஒரு முக்கிய அங்கம் ஆகிவிட்டனர். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களாக உள்ளனர். தோனி 'குரு' என்றால், பின்னர் கோலி சரியான ‘சீடர்’ என்று மாறிவிட்டார். நாம் அதே துருவத்தில் இருவரையும் கொண்டாடுகிறோம்.
கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் தோனி தலை சிறந்த தலைவராக இருந்து, இந்திய கிரிக்கெட்டை அதிக உயரத்திற்கு எடுத்துச் சென்றார். விராட் கோஹ்லியின் திறமை கண்டு கேப்டன் பதவி ஒப்படைக்கபட்டது. கோஹ்லி, ஒரு கேப்டனாக, இப்போது இந்திய கிரிக்கெட்டை அதன் உச்சகட்டத்திற்க்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
எழுத்து: பிரவிர் ராய்
மொழியாக்கம் : நிவேதா