இந்திய கிரிக்கெட் அணி மே 22 அதிகாலை 2019 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் செல்லவிருக்கிறது. இங்கிலாந்துக்கு செல்லும் முன்பாக கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உடனான நேர்காணல் நடைபெற்றது. இந்திய பௌலிங் குறித்து விராட் கோலி-யிடம் கேள்வி எழுப்பபட்டபோது குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் இந்திய அணி பௌலிங்கின் தூண்களாக உள்ளனர் என கூறியுள்ளார்.
உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளது. கடந்த சில வருடங்களாக சிறப்பான கிரிக்கெட்டை இந்திய அணி விளையாடி உள்ளது. உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை அளிக்க உள்ள அணியாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளது. இங்கிலாந்து நாட்டில் பெரும்பாலும் ஃட் மைதானமாக இருப்பதால் ஒரு பேட்டிங் பிட்சாக திகழ்கிறது. இதற்கு சான்றாக கடைசியாக நடந்த 3 தொடரில் 300+ ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது ஆகும். இத்தகைய மைதானங்களில் மெதுவாக பௌலிங் வீசுபவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மிடில் ஓவரில் சுழற்பந்து வீச்சாளர்களின் பௌலிங் கண்டிப்பாக அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருக்கும். மிடில் ஓவரில் இந்திய பௌலிங் மிகவும் சிறப்பாக உள்ளது, இது இந்திய அணியின் மிகப்பெரிய வலிமையாகும் என ராகுல் டிராவிட் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
"குல்தீப் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் பௌலிங்கில் பல சாதனைகளை புரிந்துள்ளார். இது ஒரு முன்மாதிரி ஆட்டம்தான், இவரது முழு ஆட்டத்திறனை உலக கோப்பையில் நாம் காணலாம். ஐபிஎல் தொடரில் குல்தீப் விக்கெட் வீழ்த்த தவறினாலும் சில போட்டிகளில் சிறந்த எகனாமிக்கல் ரேட்டுடன் பந்துவீச்சை மேற்கொண்டார். யுஜ்வேந்திர சகால் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினார். பௌலிங்கில் இந்திய அணியின் தூணாக சகால் மற்றும் குல்தீப் யாதவ் திகழ்கின்றனர். இவர்களுடன் கேதார் ஜாதவும் ஒருவராக உள்ளார். இவர் டி20யில் சிறப்பாக விளையாடமல் இருந்தாலும், நிச்சயமாக ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் திறமை கொண்டவர். இவர்களது பௌலிங் எதிரணிக்கு கண்டிப்பாக கடும் நெருக்கடியை அளிக்கும். வீரர்கள் தங்களது விளையாட்டின் மீது மிகுந்த கவனத்துடன் உள்ளனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் என்ற இருபெரும் சுழற்பந்து வீச்சாளர்களுடன் இங்கிலாந்து பயணம் செய்ய உள்ளது. கடந்த இரு வருடங்களாக இருவரும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு உள்ளனர். இருவரும் சேர்ந்து இதுவரை 153 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அத்துடன் வெளிநாட்டில் இந்திய அணி வெற்றி பெற பெரும் உதவியாக இருவரும் இருந்துள்ளனர். கண்டிப்பாக உலகக் கோப்பையில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள். தற்போது விராட் கோலி குல்தீப் மற்றும் சாகால் இந்திய பௌலிங்கின் தூண்களாக திகழ்வதாக தெரிவித்துள்ளார். கோலியின் நம்பிக்கையை இந்த இரு சுழற்பந்து வீச்சாளர்களும் காப்பாற்றும் வகையில் உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.
நேர்காணலில் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது,
யுஜ்வேந்திர சகால் சிறப்பான ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் வெளிபடுத்தினார். குல்தீப் யாதவ் ஐபிஎல் தொடரில் தனது பௌலிங்கில் சில போட்டிகளில் அதிக ரன்களை அளித்தார். ஆனால் கேப்டன் விராட் கோலி இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. உலகக் கோப்பையில் இவர்களது பந்துவீச்சு மிகவும் அற்புதமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.