நடந்தது என்ன?
ஆன்ரிவ் ரஸலின் பலவீனத்தை பற்றி தான் நன்கு அறிந்துள்ளதாக சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தார் குல்தீப் யாதவ். இந்த நுணுக்த்தை எதிர்வரும் உலகக் கோப்பையில் ரஸலுக்கு எதிராக பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு தெரியுமா...
ஜமைக்கா-வை சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஆன்ரிவ் ரஸல் 2019 ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதலே சீரான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துவீச்சாளர்களுக்கு இவரது அனல் பறக்கும் பேட்டிங் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இருப்பினும் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியில் ரஸலின் சகவீரர் குல்தீப் யாதவ் உலகக் கோப்பையில் ரஸலுக்கு எதிராக சில நுணுக்கங்களை கையாளப்போவதாக தெரிவித்துள்ளார்.
கதைக்கரு
கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆன்ரிவ் ரஸல் 2019 ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த வீரருக்கான விருதினை வென்றார். அத்துடன் ஆன்ரிவ் ரஸல் 56.67 என்ற சிறப்பான சராசரியுடனும், 204 என்ற பிரம்மாண்டமான ஸ்ட்ரைக் ரேட்டுடனும், 510 ரன்களை குவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்-ரவுண்டர் ரஸலின் பலவீனத்தை பற்றி குல்தீப் யாதவ் கூறியதாவது,
"திரும்பி வரும் பந்தை ரஸல் எதிர்கொள்ள சற்று தடுமாறுவார். பந்து நன்றாக திரும்பி வருமேயான், அதுவே இவரது பெரிய பலவீனமாகும்."
"இது மட்டுமல்லாமல், உலகக் கோப்பையில் இவருக்கு பந்துவீச சில நுணுக்கங்களை கையாளப்போகிறேன். இவரை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன். இதில் நான் மிகவும் தெளிவாக உள்ளேன்.
உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பௌலர் குல்தீப் யாதவ் மேலும் தெரிவித்ததாவது, தான் வலைபயிற்சியில் ரஸலுக்கு பந்து வீசியது கிடையாது என கூறியுள்ளார்.
"பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இவர் மிகவும் தடுமாறுவார். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இவரது பேட்டிங் மிகவும் அதிரடியாக இருக்கும். கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது வலைபயிற்சியில் நான் ரஸலுக்கு பந்து வீசியது கிடையாது. ஒருவரது பௌலிங்கில் தொடர்ந்து ரஸல் 2 சிக்ஸர்களை தொடர்ந்து சீராக விளாசினால் கண்டிப்பாக அந்த பௌலர் மிகவும் நெருக்கடிக்கு தள்ளப்படுவார் என்பதில் சந்தேகமில்லை."
12வது ஐபிஎல் சீசனில் குல்தீப் யாதவ் எதிர்பார்த்த அளவிற்கு தனது ஆட்டத்திறனை வெளிபடுத்தவில்லை. இடதுகை சைனா மேன் என்றழைக்கப்படும் குல்தீப் யாதவ் 9 போட்டிகளில் பங்கேற்று 71.50 என்ற மோசமான சராசரியுடனும், 9 எகானமி ரேட்-டுடனும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கும், டி20 கிரிக்கெட்டிற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தது என்ன?
குல்தீப் யாதவ் 2019 உலகக் கோப்பையில் மீண்டும் தனது இயல்பான மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் ஜீன் 15 அன்று மான்செஸ்டர் மைதானத்தில் பலபரிட்சை நடத்த இருக்கின்றன. ரஸலுக்கு எதிராக குல்தீப் யாதவ் எவ்வாறு பந்துவீச்சை கையாளுவார் என்பதை கான மிகவும் ஆர்வமாக உள்ளது.