நடந்தது என்ன?
இந்திய அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தன்னை பற்றி தவறான வதந்தியை இந்திய ஊடகங்கள் கிளப்பியுள்ளன என தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குல்தீப் யாதவ் தோனியை பற்றி சற்று தவறான கருத்துக்களை தெரிவித்ததாக இரு நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.
உங்களுக்கு தெரியுமா...
CEAT கிரிக்கெட் விருது வழங்கு விழாவில் குல்தீப் யாதவ் கூறியதாவது: எம்.எஸ்.தோனியின் முடிவுகள் சில சமயம் தவறாகவும் அமைந்துள்ளது. ஆனால் அதனை அவரிடம் எடுத்துரைக்க முடியாது. களத்தில் யாரிடமும் அதிகம் பேச மாட்டார். பந்துவீச வரும் பௌலர்களிடமோ அல்லது ஃபீல்டர்களிடமோ ஏதாவது தெரிவிக்க வேண்டுமென அவர் நினைத்தால் மட்டுமே தோனி பேசுவார்.
இதற்குப் பிறகு, குல்தீப் யாதவ் தோனியின் குறைகளை எடுத்துரைப்பதாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டன.
கதைக்கரு
இதனால் ரசிகர்கள் குல்தீப் யாதவ் மீது மிகவும் கோபம் கொண்டு டிவிட்டரில் அவரை வருத்தெடுத்தனர். தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் குல்தீப் யாதவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தான் தெரிவித்ததை பற்றி விளக்கியுள்ளார்.
குல்தீப் யாதவ் இன்ஸ்டாகிராமில் கூறியதாவது:
"தகுந்த காரணமின்றி சர்ச்சைக்குரிய தவறான கருத்துக்களை தெரிவித்து வரும் ஊடகங்கள் தற்போது புதிய சர்சையை கிளப்பியுள்ளது. சாதரணமாக தெரிவித்த கருத்தை கூட பெரிய புயல் போல் ஊடகங்களில் உள்ள சில பேர் மாற்றி விடுகின்றனர். நான் யாரை பற்றியும் எவ்வித தவறான கருத்தையும் தெரிவிக்கவில்லை. நான் மகேந்திர சிங் தோனி மீது மிகுந்த மாரியாதை வைத்துள்ளேன்."
எம்.எஸ்.தோனி கிரிக்கெடில் மிகவும் கூர்மையான நுட்பத்தைக் கொண்டிருப்பவர். ஓடிஐ மற்றும் டி20யில் ஸ்டம்பிற்கு பின்னால் தோனியின் சாதனைகளை யாராலும் மறக்க முடியாது என CEAT கிரிக்கெட் விருது வழங்கு விழாவில் குறிப்பிட்டுருந்தார். குல்தீப் மற்றும் சாகால் ஆகிய இருவருக்கும் ஸ்டம்பிற்கு பின்னாலிருந்து தோனி அதிக நுணுக்கங்களை அளித்துள்ளார். குல்தீப் யாதவை பற்றி தவறான வதந்தியை ஊடகங்கள் கிளப்பியதால் ரசிகர்கள் தேவையில்லாமல் அவர் மீது கோபப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
குல்தீப் யாதவின் சமூக வலைதள பதிவு:
அடுத்தது என்ன?
குல்தீப் யாதவ் 2019 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. இதன் விளைவாக அவர் பாதி ஐபிஎல் தொடருக்கு பிறகு அணியிலிருந்து வெளியே அமர்த்தப்பட்டார். ஒருநாள் கிரிக்கெட்டிற்கும், டி20 கிரிக்கெட்டிற்கும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கும் அதிக வேறுபாடுகள் இருப்நதால் எதிர்வரும் உலகக் கோப்பையில் குல்தீப் யாதவின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி 2019 உலகக் கோப்பையின் தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை சவுத்தாம்டன் நகரில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் ஜீன் 5 அன்று எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய தனது மூன்றாவது உலகக் கோப்பையை வெல்லும் எனின் அதில் குல்தீப் யாதவின் பங்களிப்பு சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.