இந்திய அணி என்றாலே இளம் வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஒவ்வொரு வருடமும் பத்துக்கும் மேற்பட்ட திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு வருகை தந்து கொண்டே இருக்கின்றனர். இந்திய அணியில் ஏற்கனவே பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இருக்கின்றனர். எனவே இந்த இளம் வீரர்களுக்கு சரியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு சில சமயங்களில் ஓய்வு அளிக்கப்படும்.
அந்த நேரத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும். அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தும் ஒரு சில இளம் கிரிக்கெட் வீரர் தான் இந்திய அணியில் விளையாட இடம் பெறுகின்றனர். அவ்வாறு வாய்ப்பினை பயன்படுத்தி இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஒரு வீரரை, அவர் இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம், என்று இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரா புகழ்ந்துள்ளார். அவர் கூறியதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இந்திய அணி கடைசியாக எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த உலகக் கோப்பையில் வெற்றி பெற்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வரை சென்று போராடி தோல்வி அடைந்தது. இந்த வருடம் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் எப்படியும் கோப்பையை வென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்திய அணியில் பல திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆகிய இருவரும் இந்திய அணியின் பல வெற்றிகளின் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, கூடிய விரைவில் ஓய்வு பெற்று விடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தோனிக்கு பிறகு யாரை விக்கெட் கீப்பராக களமிறக்கலாம் என்று தேர்வுக்குழு யோசித்து வருகிறது. தோனியின் இடத்திற்கு தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய 2 விக்கெட் கீப்பர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
அதுவும் குறிப்பாக பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் நீண்டகாலம் கழித்து தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதே சமயத்தில் கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் தனது திறமையின் மூலம் இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ளார்.
ரிஷப் பண்டுக்கு அனைத்து சர்வதேச போட்டிகளிலும் வாய்ப்பு கொடுப்பதில்லை. அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அழைக்கப்படும் சமயங்களில் ஒரு சில போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கிடைத்த வாய்ப்பினை மிகச்சரியாக பயன்படுத்தி ரிஷப் பண்ட், தற்போது உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெரும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
இவரை குறித்து குமார் சங்ககாரா கூறியது என்னவென்றால், ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம். தோனி கூடிய விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில், இவர் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது கூடுதல் பலம். இவர் தோனியின் இடத்திற்கு வருவதற்கு கடுமையாக உழைத்துள்ளார். இவர் சிறந்த கீப்பராகவும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவும் திகழ்கிறார். இவ்வாறு அவர் கூறினார். ரிஷப் பண்ட் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவாரா என்று பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.