முன்னாள் இலங்கை அணியின் கேப்டன் குமார் சங்ககாரா மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் (MCC) அடுத்த தலைவராக பொறுப்பேற்க உள்ளார். 41 வயதான இவர், வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த பொறுப்பை ஏற்கப் போகிறார். இதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்த பொறுப்பில் நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 232 வருட வரலாற்றில் முதல் முறையாக பிரிட்டிஷ் நாட்டை அல்லாதவர் இந்த கிரிக்கெட் கிளப்பின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
கிரிக்கெட் விதிகளை நன்கு அறிந்தவரான இவர், இந்த பொறுப்பை ஏற்க போவதில் பெருமை கொள்வதாக கூறியுள்ளதோடு, "உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் கிளப்புகளில் ஒன்று மேரிலேபோன் கிரிக்கெட் கிளப். இதனை உலகம் முழுவதும் தாம் கொண்டு சேர்க்க தொடர்ந்து பாடுபட வேண்டும் எனவும், அடுத்த ஆண்டு வரை அங்கம் வகிக்கும் நான் வருங்கால மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் புதிய பொறுப்பு என்னை சிலிர்ப்படைய செய்தது".என்று கூறினார்.
கடந்த 2000ம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய குமார் சங்கக்கராவுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதை மிகவும் பாராட்டுவதாக கூறியுள்ளார், மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் தற்போதைய தலைவர். மேலும், "அலுவலகத்தில் நடந்த வாக்கெடுப்பில் அனைவரும் குமார் சங்ககாராவின் பெயரையே முன்மொழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச தரமான மேரிலேபோன் கிரிக்கெட் கிளப், குமார் சங்கக்காரவிடம் தலைவர் பொறுப்பை ஏற்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, இவரும் எங்களது கோரிக்கையை ஏற்பதாகக் கடந்த ஜனவரி மாதம் கூறினார். இவர் ஆடுகளங்களிலும் சரி மற்ற இடங்களிலும் சரி எங்களது கிரிக்கெட் கிளப்புக்கு தன்னால் முடிந்த மிகப்பெரிய பங்களிப்பை அளிப்பார் என நம்புகிறோம்" என்றும் கூறியுள்ளார் தற்போதைய மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் தலைவர்.
வரலாற்றில் 12 மாதங்கள் இந்த கிரிக்கெட் கிளப் செயல்படாமல் இருந்தது என்பது மற்றுமொரு செய்தியாகும். இது எதனால் ஏற்பட்டது என்றால், இரு உலக போர்கள் நடக்கும் போது ஏற்பட்ட காரணங்களால் 12 மாதங்கள் செயல்படவில்லை. 2011ம் ஆண்டு குமார் சங்ககாரா இந்த கிளப்பின் ஒரு நிகழ்வில் பங்கேற்றார். ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு அழைக்கப்பட்டது அதுவே முதல் முறையாகும். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற குமார் சங்ககரா அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பங்கேற்றதோடு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று ஏறத்தாழ 27 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார், குமார் சங்ககரா. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் இவர் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.