இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த தொடரை இலங்கை அணி 2-0 என வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த தொடருக்கு பின் ஐசிசி இன்று டெஸ்ட் தரவரிசையை வெளியிட்டது.
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் விஸ்வா பெர்னான்டோவுடன் இனைந்து குசல் மெண்டிஸ் 163 ரன்களை குவித்து இலங்கை அணியை இரண்டாவது டெஸ்டில் வெற்றிபெற செய்தார். இதன் மூலம் இன்று வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் குசல் பெரரா 11 இடங்களில் முன்னேற்றம் கண்டு ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் டாப் 20 இடத்திற்கு முன்னேறினார்.
இலங்கை அணி போர்ட் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் 2-0 என்று முதல் ஆசிய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதனை ஐசிசி தனது இனையத்தில் குறிப்பிட்டுள்ளது.
இரண்டாவது டெஸ்டில் சிறப்பாக விளையாடி இலங்கை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற குசல் மெண்டிஸ் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 18வது இடத்தை பிடித்தார்.
இரண்டாவது டெஸ்டில் சிறப்பாக விளையாடிய பெர்னான்டோவும் ஐசிசி தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளார். டெஸ்ட் தரவரிசையில் 65வது இடத்தில் இருந்த இவர் 35வது இடத்தை பிடித்து முன்னேற்றம் கண்டுள்ளார். அத்துடன் தனது கிரிக்கெட் வரலாற்றில் அதிக பட்ச கிரிக்கெட் ரேட்டிங்கான 455 புள்ளிகளை பெற்றுள்ளார்.
இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடி 42 ரன்களை அடித்து இலங்கை அணியை 150 ரன்களை அடையச் செய்த நிரோஷன் திக்வெல்லா டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 8 இடங்களில் முன்னேறி 37வது இடத்தை பிடித்தார்.
தென்னாப்பிரிக்கா வீரர்கள் எதிர்பார்த்தபடி தரவரிசையில் இறக்கம் கண்டுள்ளனர். இரண்டாவது டெஸ்டில் நான்காவது இன்னிங்ஸில் 43 ரன்களை விளாசிய டின் எல்கர் 7 இடங்களில் இறக்கம் கண்டு தரவரிசையில் 23வது இடத்தில் உள்ளார். தெம்பா பவ்மா 5 இடங்கள் இறக்கம் கண்டு டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 38வது இடத்தில் உள்ளார்.
பௌலிங் தரவரிசை பொறுத்தவரை டுனே ஓலிவர் மற்றும் சுரங்கா லக்மல் 3 இடங்களில் முன்னேறி 19 மற்றும் 30 வது இடங்களை பிடித்துள்ளனர். பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா தனது சிறப்பான சராசரியை மீண்டும் கொண்டு வந்துள்ளது. டுனே ஓலிவருக்கு இந்த தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. 2 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தனது தொடக்க கிரிக்கெட் காலத்திலே தரவரிசையில் டாப்-20 இடத்தை பிடித்துள்ளார். விஸ்வா பெர்னான்டோ இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் இந்த தொடரில் மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தி தரவரிசையில் 6 இடங்களில் முன்னேறி 43வது இடத்தை பிடித்தார்.
டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் டாப்-15ல் எந்த மாற்றமும் இல்லை. ஜேஸன் ஹல்டர் தனது முதல் ஆல்ரவுண்டர் ரேங்கை தக்கவைத்துக் கொண்டார்.