இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் கடைசி வார லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சீசனின் 55வது லீக் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் விளையாடும் பஞ்சாப் அணி எற்கனவே தொடரைவிட்டு வெளியேறியதால் இந்த போட்டியின் முடிவால் எந்த ஒரு பாதிப்பு இல்லை. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டுப் ப்ளஸிஸ் இருவரும் களம் இறங்கினர். வழக்கம் போல் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே வாட்சன் சாம் கர்ரன் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா நிலைத்து விளையாடினார். பாப் டுப் ப்ளஸிஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் மிகபெரிய பாட்னர்ஷிப் கொடுத்தனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் இருவரும் அரைசதம் விளாசினர். இவர்கள் இரண்டாவது விக்கெட்டிற்கு 120 ரன்கள் அடித்து அசத்தினர்.
சுரேஷ் ரெய்னா 53 ரன்னில் சாம் கர்ரன் பந்தில் அவுட் ஆகினார். மறுமுனையில் நிலைத்து விளையாடிய பாப் டுப் ப்ளஸிஸ் 96 ரன்கள் குவித்த நிலையில் நான்கு ரன்கள் அடித்தால் சதம் என்ற நிலையில் சாம் கர்ரனில் சிறப்பான பந்து வீச்சால் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய மகேந்திர சிங் தோனி நிலையான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 170 ரன்கள் அடித்தது.
அதன் பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் களம் இறங்கினர். கே.எல்.ராகுல் வந்த வேகத்தில் அதிரடியாக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக விளாசினார். 19 பந்தில் அரைசதம் விளாசிய கே.எல்.ராகுல் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த மறுமுனையில் கெய்ல் ஸ்பின்னர் ஓவர்களை வெலுத்து வாங்கினார். ரன்கள் விறுவிறுவேன உயர்ந்த நிலையில் 9 ஓவர்களிலேயே 100 ரன்களை கடந்தது. சென்னை அணி தோல்வி அடைவது உறுதியான நிலையில் 14.4 ஓவர்களில் பஞ்சாப் அணியை வெற்றி பெற விடாமல் தடுப்பதை முன்னிறுத்தி விளையாடியது.
அப்படி பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் சென்னை அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படும் என்பதால் இதை இலக்காக கொண்டு விளையாடியது. கே.எல் ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் இருவரும் ஹர்பஜன் ஓவரில் தொடர்ந்து அவுட் ஆக அடுத்து வந்த வீரர்களில் நிக்கோலஸ் பூரண் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் 18வது ஓவரில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக அதிரடியாக விளையாடிய கே.எல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.