புதிதாக துவங்கிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் இன்னொரு மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆஷஸ் தொடர் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் ரூட் மற்றும் கனே வில்லியம்சன் முக்கியமான கடந்த கடந்த வாரம் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றி இந்த தொகுப்பில் மிக ஆழமாக எடுத்துரைக்க உள்ளது
#1.டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்:
இம்மாதம் முதல் தேதியிலிருந்து சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் துவங்கியுள்ளது. எனவே, பல்வேறு அணிகளும் இத்தகைய சாம்பியன்ஷிப்பில் தன்மை ஈடுபடுத்த துவங்கியுள்ளது. அதன்படி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடர், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரிலும் நடைபெற்ற ஓரிரு போட்டிகளைக் கொண்டு புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து இதுநாள்வரை தலா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய ஆஷஸ் தொடரில் உலக சாம்பியனான இங்கிலாந்து தங்களது ஆதிக்கத்தினை செலுத்தும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், ஆஸ்திரேலிய அணி முதலாவது டெஸ்டில் வெற்றியும் இங்கிலாந்து அணி வெற்றி பெற நூலிழையில் தவறி ஆட்டத்தை டிரா செய்தது.
இது மட்டுமல்லாது, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டும் முடிவு பெற்றுள்ளது. அவற்றில் சொந்த மண்ணைச் சேர்ந்த இலங்கை தனது கட்டுக்கோப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தால் வெற்றி கண்டுள்ளது. அதுவும் குறிப்பாக, நான்காவது இன்னிங்சில் சதமடித்த கேப்டன் கருணரத்னே தாம் வழிநடத்திய முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிகளை குவித்த மூன்றாவது இலங்கை கேப்டன் என்னும் சாதனையை படைத்தார். எனவே, இந்த மூன்று டெஸ்ட்களும் முடிந்த வேளையில் வேறு எந்த ஒரு அணியும் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.
அதன்படி, அந்தந்த அணியினரின் செயல்பாடுகளை கொண்டு புள்ளிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் இலங்கை அணி 60 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஆஸ்திரேலிய அணி 32 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இங்கிலாந்து அணி 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் நியூசிலாந்து அணி எவ்வித புள்ளியும் இன்றி நான்காம் இடத்திலும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதும் இரு டெஸ்ட்களை உள்ளடக்கிய தொடர் இன்று முதல் துவங்க இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#2.திணறி வரும் ரூட் மற்றும் வில்லியம்சன்:
2019 உலக கோப்பை தொடரில் தமது பேட்டிங் மற்றும் கேப்டன்கால் மட்டுமே நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டிக்கு வரை அழைத்துச் சென்ற கேப்டன் கனே வில்லியம்சன் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளார். இதன் காரணமாக முதலாவது போட்டியில் நியூசிலாந்து தோல்வி கண்டது. அந்த போட்டியில் 2 இன்னிங்சிலும் முறையே 0 மற்றும் 4 ரன்களை மட்டுமே குவித்து ரசிகர்களை கடும் விரக்தியில் ஆழ்த்தியுள்ளார், கனே வில்லியம்சன். அதுமட்டுமல்லாது, இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் சர்ச்சைக்குரிய வகையில் பந்து வீசியதாகவும் புகார் எழுப்பப்பட்டுள்ளது.
கனே வில்லியம்சனை போலவே ஜோ ரூட்டும் தற்போது நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரின் போதிய பார்மின்றி தவித்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் முக்கியமான மூன்றாம் இடத்தில் களம் இறங்கும் பேட்ஸ்மேனான ஜோ ரூட், முதல் டெஸ்ட் போட்டியில் முறையே 57 மற்றும் 28 ரன்களை குவித்து சற்று ஆறுதல் அளித்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முறையே 14 மற்றும் 0 ரன்களில் தனது விக்கெட்டுகளை இழந்து உள்ளார். எவரும் எதிர்பார்க்காத வகையில்,பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி சதத்தை அடித்து இங்கிலாந்து அணியை மீட்டு எடுத்தார்.
ஆனால், அனைவரின் நம்பிக்கையையும் பெற்ற ஜோ ரூட் இவ்வாறு திணறுவது ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு சற்று பின்னடைவாகும். எனவே, லீட்சில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது இவர் இழந்த பார்மை மீட்டு எடுத்தால் மட்டுமே அடுத்தடுத்த போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று பெருமைமிக்க ஆஷஸ் தொடரை தங்களது சொந்த மண்ணில் கைப்பற்றுவதற்கு ஏதுவாக அமையும்.
#3.வரலாற்றில் முதல் கன்காஷன் சப்ஸ்டிட்யூட்:
16 மாதங்களுக்கு பின்னர், டெஸ்ட் போட்டிகளில் திரும்பியுள்ள ஸ்டீவன் ஸ்மித், தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி முதல் டெஸ்டில் 2 சதங்களும் இரண்டாவது டெஸ்டில் 92 ரன்கள் குவித்துள்ளார், ஸ்டீவன் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் ரசிகர்களின் பலத்த இடையூறுகளுக்கு மத்தியில் தமது பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி முதலாவது டெஸ்டில் வெற்றியை பெற்று தந்தார். இருப்பினும், இரண்டாவது டெஸ்டில் ஆர்ச்சர் வீசிய எலும்பை நொறுக்கும் வேகப்பந்து வீச்சு தாக்குதலால் நிலைகுலைந்த ஸ்டீவன் ஸ்மித் உடனே மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், ரிட்டயர் ஹட் முறையில் மைதானத்திலிருந்து வெளியேறினார். பெருமைமிகுந்த லார்ட்ஸ் டிரஸ்ஸிங் ரூமில் இவர் நுழையும்போது பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற்றார். ஆஸ்திரேலிய அணி மற்றுமொரு விக்கெட்டை இழ்ந்ததால் மீண்டும் களத்தில் புகுந்த ஸ்டீவன் ஸ்மித் கூடுதலாக 12 ரன்களைக் குவித்தார். துரதிஷ்டவசமாக 92 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறினார். அணியில் காயமடைந்த வீரருக்கு பதிலாக இடம்பெறும் மாற்று வீரர் ஃபீல்டிங் மட்டுமே செய்ய அனுமதித்த நிலையில், தற்போது பேட்டிங் மற்றும் பௌலிங் ஆகியவற்றிலும் அவர் பங்கேற்கலாம் என ஐசிசி தனது விதிமுறையை தளர்த்தியது. எனவே, ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாக களமிறங்கிய மார்னஸ் லேபுஸ்சேக்னே 142 கால டெஸ்ட் வரலாற்றில் முதல்கன்காஷன் சப்ஸ்டிட்யூட் எனும் பெருமையை தனதாக்கினார். அதுமட்டுமல்லாது, இத்தகைய புதிய ஐசிசி விதி முறையை பின்பற்றும் முதலாவது நாடு என்ற பெருமையும் ஆஸ்திரேலிய படைத்தது. அவ்வபோது மழையால் பாதிக்கப்பட்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தம்மால் முடிந்த அளவிற்கு 59 ரன்கள் குவித்து அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார். ஒருவேளை இவர் பேட்டிங்கில் களமிறங்கும் புதிய விதிமுறையை ஐசிசி அளிக்காமல் இருந்தால், நிச்சயம் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி பெற்றிருக்கும்.