#3.வரலாற்றில் முதல் கன்காஷன் சப்ஸ்டிட்யூட்:
16 மாதங்களுக்கு பின்னர், டெஸ்ட் போட்டிகளில் திரும்பியுள்ள ஸ்டீவன் ஸ்மித், தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி முதல் டெஸ்டில் 2 சதங்களும் இரண்டாவது டெஸ்டில் 92 ரன்கள் குவித்துள்ளார், ஸ்டீவன் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் ரசிகர்களின் பலத்த இடையூறுகளுக்கு மத்தியில் தமது பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி முதலாவது டெஸ்டில் வெற்றியை பெற்று தந்தார். இருப்பினும், இரண்டாவது டெஸ்டில் ஆர்ச்சர் வீசிய எலும்பை நொறுக்கும் வேகப்பந்து வீச்சு தாக்குதலால் நிலைகுலைந்த ஸ்டீவன் ஸ்மித் உடனே மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், ரிட்டயர் ஹட் முறையில் மைதானத்திலிருந்து வெளியேறினார். பெருமைமிகுந்த லார்ட்ஸ் டிரஸ்ஸிங் ரூமில் இவர் நுழையும்போது பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற்றார். ஆஸ்திரேலிய அணி மற்றுமொரு விக்கெட்டை இழ்ந்ததால் மீண்டும் களத்தில் புகுந்த ஸ்டீவன் ஸ்மித் கூடுதலாக 12 ரன்களைக் குவித்தார். துரதிஷ்டவசமாக 92 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறினார். அணியில் காயமடைந்த வீரருக்கு பதிலாக இடம்பெறும் மாற்று வீரர் ஃபீல்டிங் மட்டுமே செய்ய அனுமதித்த நிலையில், தற்போது பேட்டிங் மற்றும் பௌலிங் ஆகியவற்றிலும் அவர் பங்கேற்கலாம் என ஐசிசி தனது விதிமுறையை தளர்த்தியது. எனவே, ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாக களமிறங்கிய மார்னஸ் லேபுஸ்சேக்னே 142 கால டெஸ்ட் வரலாற்றில் முதல்கன்காஷன் சப்ஸ்டிட்யூட் எனும் பெருமையை தனதாக்கினார். அதுமட்டுமல்லாது, இத்தகைய புதிய ஐசிசி விதி முறையை பின்பற்றும் முதலாவது நாடு என்ற பெருமையும் ஆஸ்திரேலிய படைத்தது. அவ்வபோது மழையால் பாதிக்கப்பட்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தம்மால் முடிந்த அளவிற்கு 59 ரன்கள் குவித்து அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார். ஒருவேளை இவர் பேட்டிங்கில் களமிறங்கும் புதிய விதிமுறையை ஐசிசி அளிக்காமல் இருந்தால், நிச்சயம் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி பெற்றிருக்கும்.