ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியிடு : புஜாரா , பண்ட் அசுர வேக முன்னேற்றம்

Pant & Pujara
Pant & Pujara

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று சதங்களை விளாசி தொடர்நாயகன் மற்றும் ஆட்டநாயகன் விருதை பெற்ற புஜாரா சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா-விற்கு எதிரான தொடரில் கலக்கிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தனது அதிகபட்ச டெஸ்ட ரேக்கினை எட்டியுள்ளார். இவர் 21 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்து இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச டெஸ்ட் ரேங்கை பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற வரலாற்று சாதனையை முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் ஃபரோக் இன்ஜிநியர்-றுடன் பகிர்ந்துள்ளார். எம்.எஸ்.தோனியின் அதிக பட்ச டெஸ்ட் பேட்டிங் ரேங்க்கிங் 19 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் தனது முதல் இடத்தை அப்படியே தக்கவைத்துள்ளார்.

2016 ஐசிசி U-19 உலகக் கோப்பையில் நேபாள் அணிக்கு எதிராக 18 பந்துகளில் அரைசதமடித்த, ரிஷப் பண்ட் தனது 9வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் 159 ரன்கள் அடித்து ஐசிசி சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் டாப் - 20 யில் உள்ளார். ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய தொடரில் பங்கு பெறுவதற்கு முன்னர் டெஸ்ட் தரவரிசையில் 59 வது இடத்தை வகித்தார். ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவிற்கெதிரான டெஸ்ட் தொடரில் 350 ரன்கள் என பேட்டிங்கிலும் , விக்கெட் கீப்பிங்கில் 20 கேட்சுகளையும் பிடித்து தனது முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்தியுள்ளார்.

புஜாரா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 521 ரன்களை குவித்து இந்திய அணி 2-1 என தொடரை வெல்ல உறுதுணையாக இருந்தார். அத்துடன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளார். கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் புஜாரா 1 இடம் முன்னேறி 3வது இடத்திலும் , ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 57வது இடத்திலும் , மயான்க் அகர்வால் 5 இடங்கள் முன்னேறி 62வது இடத்தையும் பிடித்தனர்.

பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 99 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி தனது அதிகபட்ச ரேங்கான 44வது இடத்தை பிடித்தார். பூம்ரா 16வது இடத்திலும் , முகமது ஷமி 1 இடம் முன்னேறி 22வது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர் டெஸ்ட் தரவரிசையில் ஜடேஜா 1 இடம் முன்னேறி 2வது இடத்தை பிடித்தார்.

தென்னாப்பிரிக்கா. அணியின் மார்க்ரம் கேப்டவுனில் 78 ரன்கள் அடித்தார். இவர் 7 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் பிடித்துள்ளார். தெம்பா பவுமா 5 இடங்கள் முன்னேறி தனது அதிகபட்ச ரேங்கான 26வது இடத்தை பிடித்துள்ளார். இவர் கேப்டவுன் டெஸ்ட்டில் 75 ரன்களை அடித்தார். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கேப்டன் டுபிளஸ்ஸி 6 இடங்கள் முன்னேறி 16வது இடத்தை பிடித்தார். இவர் கேப்டவுன் டெஸ்ட்டில் சதம் விளாசினார். பந்துவீச்சில் பிலாண்டர் 1 இடம் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். ஆலீவர் 36வது இடத்திலிருந்து 32 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் எவ்வகையான புள்ளிகளையும் இழக்காமல் முதல் இடத்தை வகிக்கிறது. ஆஸ்திரேலிய அணி 1 புள்ளியை இழந்தாலும் முன்பு வகித்த அதே 5வது இடத்தை தக்கவைத்துள்ளது.

Quick Links

Edited by Fambeat Tamil