ஐசிசி டெஸ்ட் தரவரிசை: வரலாற்றில் முதல் முறையாக இரண்டாம் பிடித்தது நியூஸிலாந்து அணி

நியூஸிலாந்து அணி
நியூஸிலாந்து அணி

ஐசிசி தரவரிசை பட்டியலை ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்குபெறும் அணிகள் மற்றும் அதில் விளையாடும் வீரர்களை வரிசைபடுத்தி ஐசிசி வெளியிடும். தற்போது வெளியாகியுள்ள டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் நியூஸிலாந்து அணி 2வது இடம் பிடித்திருக்கிறது. வாழ்நாளில் முதல் முறையாக டெஸ்ட் பட்டியலில் இவ்விடத்தை பிடித்துள்ளார்கள். கேன் வில்லியம்சன் நியூஸிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக அறிமுகமானத்தில் இருந்தே வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பல சமயங்களில் கூலாக இருந்து இவர் எடுக்கும் முடிவுகளே நியூஸிலாந்து அணியின் வெற்றி பார்முலா.

புள்ளி பட்டியலில் இரண்டாம் பிடித்துள்ள நியூஸிலாந்து அணி 107 புள்ளிகள் பெற்றுள்ளது. தரவரிசையில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி. இவ்ரகள் பெற்றிருக்கும் புள்ளிகள் 116. சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர் முடிந்ததும் புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சொந்த மண்ணிலேயே 0-2 என தோல்வியை தழுவிய தென்னாபிரிக்கா அணி பதரவரிசை பட்டியலில் 105 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முதல் முறையாக தென்னாபிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆசிய அணி என சாதனை புரிந்த இலங்கை அணி தரவரிசையில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. ஆனால் 4 புள்ளிகள் உயர்ந்து 93 உடன் 6வது இடம் பிடித்துள்ளது. தென்னாபிரிக்கா அணியை பொறுத்தவரை அடுத்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு எதிராக இருக்கும் என நம்பப்படுகிறது. இதற்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டு இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. நியூஸிலாந்து அணியை பொறுத்தவரையில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில நீடிக்கும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. அடுத்து சொந்த மண்ணிலேயே பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ள இருப்பதால், தொடரை நியூஸிலாந்து வென்று இரண்டாம் இடத்தை தன்வசம் ஆக்கிக்கொள்ளும். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற பிப்ரவரி 28ம் தேதி ஹாமில்டன் நகரில் ஆரம்பிக்க உள்ளது. 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகள் வெலிங்டன் மற்றும் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முன்னதாக இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணி அப்பிடியே அள்ளியது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. துபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. பின்பு இந்திய அணியிடம் சொந்த மண்ணிலேயே தோல்வியை சந்தித்தது. இலங்கை அணியை சொந்த மண்ணில் வீழ்த்திய ஆஸ்திரேலியா 104 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை யாரும் எதிர்பார்க்காத விதமாக மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 1-2 என்று தொடரை இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 50 ஓவர் உலகக்கோப்பை முடிவு பெற்ற உடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகி உள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை கீழே காணலாம்.

# 1 இந்தியா - 116 தரவரிசை புள்ளிகள்

# 2 நியூசிலாந்து - 107 மதிப்பீடு புள்ளிகள்

# 3 தென் ஆப்ரிக்கா - 105 மதிப்பீடு புள்ளிகள்

# 4 ஆஸ்திரேலியா - 104 மதிப்பீடு புள்ளிகள்

# 5 இங்கிலாந்து - 104 மதிப்பீடு புள்ளிகள்

# 6 இலங்கை - 93 மதிப்பீடு புள்ளிகள்

# 7 பாகிஸ்தான் - 88 மதிப்பீடு புள்ளிகள்

# 8 வெஸ்ட் இண்டீஸ் - 77 மதிப்பீடு புள்ளிகள்

# 9 வங்காளம் - 60 மதிப்பீடு புள்ளிகள்

# 10 ஜிம்பாப்வே - 13 மதிப்பீடு புள்ளிகள்

App download animated image Get the free App now