20 ஓவர் போட்டியின் சிறந்த இடது கை வீரர்களின் அணி

Chris Gayle
Chris Gayle

பொதுவாக வலது கை வீரர்களைவிட இடது கை வீரர்கள் அதிக நுட்பம் மற்றும் சிறந்த செயல்முறை கொண்ட வீரர்களாக இருப்பர். அது பந்துவீச்சு என்றாலும் சரி அல்லது பேட்டிங் என்றாலும் சரி அவர்கள் வலது கை வீரர்களைவிட சற்று மேலேயே இருப்பர். எடுத்துகாட்டாக ஒரு வலது கை பந்துவீச்சாளரின் பொதுவான டெலிவரி, வலது கை டெலிவரி (Right Arm Delivery) இந்த வகை பந்துகளைக் கொண்டு ஒரு இடது கை மட்டைவீச்சாளரை LBW மூலம் அவுட் செய்வது என்பது கடினம். ஒன்று அந்தப் பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியில் பட்டுவிடும் அப்படி இல்லை என்றால் அந்தப் பந்து ஸ்டம்பை தாக்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் இதுவே ஒரு இடது கை பந்துவீச்சாளர் வலது கை மட்டை வீச்சாளர்களுக்கு எமனாக அமைவர். அவர்கள் பந்தை அவர்களிடமிருந்து விலகி மற்றும் உள்நோக்கி வரவும் செய்வர்.

குறிப்பு:

இதில் வரும் மட்டை மற்றும் பந்துவீச்சாளர்கள் அவர்களுடைய தனி திறமையில் இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பர். ஆல்ரவுண்டர் எனும்பொழுது இரண்டுமே இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பார்.

1.கிரீஸ் கெயில் (Chris Gayle)

இவரைக் குறைந்த ஓவர் போட்டிகளின் அரக்கன் என்றே சொல்லலாம். கிரீஸ் கெயில் உலகம் முழுவதும் நடக்கும் அனைத்து 20 ஓவர் லீக் போட்டிகளிலும் விளையாடிய வீரர் ஆவார். உலகதரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை இவர் அடித்து நொறுக்கும் விதம் இவரை இந்த 20 ஓவர் போட்டியின் அரசனாக வைத்து இருக்கிறது. கெயில் என்றாலே பயம்.

கெயில் மொத்தம் 52 இன்னிங்ஸில் 1600 ரன்கள் அடித்து உள்ளார்.அவரது சராசரி 33.48. அது மட்டுமின்றி இவர் இரண்டு செஞ்சுரியும் அடித்துள்ளார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் செஞ்சுரி அடித்தா முதல் வீரரும் இவர்தான். 20 ஓவர் போட்டி என்றாலேயே அவருக்குத் தனி குஷிதான். இந்த வடிவ போட்டியின் அபாயகரமான தொடக்க ஆட்டக்காரர் என்றால் அது கெயில்தான்.

2. டேவிட் வார்னர் (David Warner)

David Warner
David Warner

இப்பொழுது உள்ள சூழ்நிலை இவருக்குச் சாதகமாக இல்லை என்றாலும் இவர் 20 ஓவர் போட்டியின் இன்னொரு அபாயகரமான தொடக்க ஆட்டக்காரர் ஆவார். ஆஸ்திரேலியா அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் களம்கானும் வீரர் இவர். தனது அணிக்கு அசுரவேக தொடக்கம் தருவதில் வல்லவர்.

இவர் இதுவரை 70 சர்வதேச போட்டிகளில் களம்கண்டு சுமார் 1792 ரன்கள் குவித்து உள்ளார். இவரது சராசரி 26.75 மற்றும் இவரது ஸ்டிரைக் ரேட் 140.11 ஆகும். இவர் கெயில் உடன் நமது அணியில் இணைந்தால் எதிரணி பந்துவீச்சாளர்கள் நிலைமை அவ்வுளவுதான். வார்னர் – பாக்கெட் சைஸ் டைனமோ.

3. சுரேஷ் ரெய்னா (Suresh Raina)

Suresh Raina
Suresh Raina

உங்களுக்கே இவரைப் பற்றித் தெரிந்திருக்கும். ஆம் இவர்தான் நமது இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா. இவர் ஒருநாள் போட்டிகளில் சற்று சரிவு கண்டாலும் 20 ஓவர் போட்டிகளில் இவர்தான் ராஜா. இவரின் தாக்கத்தை ஐபில் போட்டிகளில் பார்த்து இருப்பீர்கள்.

சுரேஷ் ரெய்னா இதுவரை 66 இன்னிங்ஸில் 1600 ரன்கள் அடித்து உள்ளார். இவர் 30+ சராசரி மற்றும் 134 S/R வைத்து உள்ளார். இந்தியாவின் நம்பகமான 20 ஓவர் போட்டியாளர் ரெய்னா. 20 ஓவர் போட்டிகளில் இந்தியா சார்பாக முதல் நூறு அடித்த இந்திய வீரர் ரெய்னா. அதை உலககோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளாசினார்.

4. இயோன் மோர்கன் (Eoin Morgan(C))

Eoin Morgan
Eoin Morgan

நமது இடது கை வீரர்களை வழி நடத்த மோர்கன் எனும் விடாமுயற்சி கொண்ட ஒரு தலைவனைத் தவிர வேறு யாராலும் முடியாது. சிறுவடிவிலான போட்டிகளில் மோர்கன் ஒரு மேட்ச் வின்னர் ஆகவே திகழ்கிறார். நான்காவதாகக் களம் இறங்கி தனது அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்துவதில் வல்லவர். இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம்.

இவர் 73 இன்னிங்ஸில் 1723 ரன்கள் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் குவித்து உள்ளார். இவரது சராசரி 28.72 மற்றும் இவரது S/R 131.53 ஆகும். நமது அணியின் நான்காவது வீரருக்குப் பொருத்தமான வீரர். இவரே நமது இடது கை வீரர்கள் அணியின் கேப்டன்.

5. குமார் சங்கக்காரா (Kumar Sangakkara(WK))

Kumar Sangakkara
Kumar Sangakkara

சங்கக்காரா இலங்கை அணியின் முதுகெலும்பு என்றே சொல்லலாம். சமயத்திற்கு ஏற்ப ஆடுவதில் வல்லவர் இவர். முதலில் டெஸ்ட் வீரர் என்று சித்தரிக்கபட்ட இவர் பின்பு தனது அபாரமான ஆட்டத்தால் குறுகிய வடிவ போட்டிகளிலும் ஜொலித்தார்.

இவர் இதுவரை 53 இன்னிங்ஸில் 1382 ரன்கள் விளாசியுள்ளார்.இவரது சராசரி 31.41 ஆகும் மற்றும் சர்வதேச போட்டிகளில் 120 S/R வைத்து உள்ளார். இவர் சிறந்த மட்டை வீச்சாளர் மட்டும் அல்ல ஒரு சிறந்த விக்கெட் கீப்பரும்கூட. இவர் சர்வதேச 20 போட்டிகளில் 45 நபர்களை தனது கீப்பிங் மூலம் ஆட்டம் இலக்க செய்து உள்ளார்.

6. யுவராஜ் சிங் (Yuvraj Singh)

Yuvraj Singh
Yuvraj Singh

அடுத்து நமது உலக கோப்பை நாயகன் யுவராஜ் சிங். சிக்ஸர் மன்னன். குறுகிய வடிவ போட்டிகளில் இவர் ஒரு அபாயகரமான வீரர்.இவர் தனது அணிக்காக பேட்டிங், பவுலிங் & பீல்டிங் என எப்படி முடியுமோ அப்படியெல்லாம் வலுசேர்க்ககூடிய வீரர்.

தனது அதிரடி ஆட்டதிறனால் அணிக்கு தனியாக வெற்றியை தேடி தரகூடிய நம்பகமான வீரர் யுவராஜ்சிங். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்த ஒரே வீரர் இவரே. குறைந்த பந்துகளில் ஐம்பது ரன்கள் அடித்த வீரரும் இவரே.58 போட்டிகளில் 1177 ரன்கள் அடித்து உள்ளார். இவரது சராசரி 28.02. இவரது S/R 136.38.

7. சகிப் அல் ஹாசன் (Shakib Al Hasan)

Shakib Al Hasan
Shakib Al Hasan

குறுகிய வடிவ போட்டிகளில் ஷகிப் ஒரு சிறந்த அல்ல ரவுண்டர். தனது பேட்டிங் மற்றும் தனது பந்துவீச்சு மூலம் அணிக்கு வெற்றி தேடி தரகூடிய இவர் அணியில் இருப்பது அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும்.

இவர் தனது அதிரடி பேட்டிங் மூலம் பந்தை எல்லைகோட்டிற்கு வெளியில் அடிப்பது மட்டும் இன்றி தனது பவுலிங் மூலம் மற்ற வீரர்களை திணற அடிப்பதில் வல்லவர். சர்வதேச போட்டிகளில் 68 இன்னிங்ஸில் 1368 ரன்கள் மட்டும் 80 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இவர் அணியில் இருப்பது அணிக்கு மேலும் வலுசேர்க்கும்.

8. குல்தீப் யாதவ் (Kuldeep Yadav)

Kuldeep Yadav
Kuldeep Yadav

இவர் ஒரு சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர். இவர் தனது திறமையின் மூலம் குறுகிய வடிவ போட்டிகளில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர்.தனது வித்தியாசமான பந்துகளின் மூலம் எந்த ஒரு அணியையும் திணற வைக்ககூடியவர். சற்று அதிகமாக ரன்கள் கொடுத்தாலும் போட்டியை எப்போது வேண்டுமானாலும் தனது அணி பக்கம் திருப்பகூடியவர்.

இவர் இதுவரை 12 சர்வெதே போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இருப்பினும் அந்த 12 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 24/5 இங்கிலாந்துக்கு எதிராக அமைந்தது. இவரது எக்னாமி 7.29 ஆகும்.

9. முஸ்தபிசூர் ரஹ்மான் (Mustafizur Rahman)

Mustafizur Rahman
Mustafizur Rahman

தனது பந்துவீச்சின் மூலம் உலகத்தை திகைக்க வைத்தவர் இவர். தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் எந்த ஒரு வீரரயும் திணற அடிக்க செய்பவர்.

பங்களாதேஷ் அணி அறிமுகபடித்திய இளம் வீர்களில் மிகவும் திறமை வாய்ந்தவர் இவர். இவர் இதுவரை 43 விக்கெட்டுகளை 27 சர்வதேச போட்டிகளில் வீழ்த்தி உள்ளார். இவரது சராசரி 17.44. இவரும் 20 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் ஒருவர்.

10. டிரெண்ட் போல்ட் (Trent Boult)

Trent Boult
Trent Boult

நியூசிலாந்து அணி வீரர் ஆன இவர் இப்பொழுது உள்ள தலைசிறந்த சர்வதேச பத்துவீச்சாளர்களில் ஒருவர். இவர் பந்தை உள்நோக்கி மற்றும் வெளியில் எடுத்து செல்வதிலும் வல்லவர். நியூசிலாந்து அணியின் முக்கியமான வீரர் இவர்.

இதுவரை 25 சர்வதேச போட்டிகளில் ஆடிய இவர் 37 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இவரது சராசரி 21.19 ஆகும். இவரது சிறந்த பந்துவீச்சு 34/4 ஆகும். எல்லை கோட்டில் வியக்ககூடிய கேட்ச் ஒன்றை எடுத்து அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியவர்.

11. முஹம்மது அமீர் (Mohammed Amir)

Mohammed Amir
Mohammed Amir

இப்பொழுது உள்ள அபாயகரமான பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர். தனது டெலிவரி (Stock Delivery) மூலம் வலது கை மட்டை வீச்சாளர்களை திணற அடிக்க செய்வதில் வல்லவர். இவரது வேகம் இவருக்கு கூடுதல் பலம்.

இவர் இதுவரை 41 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இவரது எக்னாமி 6.84 மற்றும் இவரது சராசரி 19.98 ஆகும். இவர் போல்ட் மற்றும் ரஹ்மான் உடன் இணைந்து செயல்பட்டால் எந்த ஒரு அணியயும் வீழ்த்த முடியும்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now