ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர், தலை சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ரசிகர்களால் லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என செல்லமாக அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், பல சாதனைகளை புரிந்துள்ளார். மேலும், பல ரசிக்கத்தக்க பிரமிக்கத்தக்க பல இன்னிங்சுகள் விளையாடி உள்ளார்.
இருப்பினும், அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் விளையாடிய இன்னிங்ஸ் குறித்து இத்தொகுப்பில் காண்போம்.
களத்தில் சச்சின் டெண்டுல்கர்:
சச்சின் டெண்டுல்கரை வரவேற்க சூரியன் வெளியே வர, கிரிக்கெட் மேதையின் வருகையால் ரசிகர்கள் கூட்டம் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் திகைத்து போய் நின்றனர். சச்சின் டெண்டுல்கரை வேடிக்கை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரண்டனர். 2008ல் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி, தனது கம்பீரமான சதத்தை பதிவு செய்து, ரசிகர்களுக்கு விருந்து அளித்தார்.
பிரட் லீ, மிட்செல் ஜான்சன், பிராட் ஹாக் போன்ற ஜாம்பவான்கள் பந்து வீசினாலும், சச்சின் டெண்டுல்கர் அசராமல் நிலைத்து நின்று ஆடினார். அவர்களின் பந்துவீச்சை பவுண்டரிகளாக விளாசி அசத்தினார் சச்சின் டெண்டுல்கர். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பலவகையில் முயற்சி செய்தும் சச்சினின் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. சச்சின், நங்கூரம் போல நிலைத்து நின்று விளையாடினார். இதில் சிறப்பு என்னவென்றால், சச்சின் டெண்டுல்கர் ஆடுகளத்தின் நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு விளையாடினார். நிலைத்து நின்று விளையாடுவது மற்றும் அதிரடியாக விளையாடுவது போன்ற இரண்டு பரிமாணங்களையும் வெளிப்படுத்தி அசத்தினார், சச்சின் டெண்டுல்கர். தனது அற்புதமான பேட்டிங்கின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்தார்.
முக்கியமாக எதிரணியினர் மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்ப சிறிதளவு சச்சின் டெண்டுல்கர் கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. அத்தகைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியினரை திணறடித்தார், சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கர் பல சிறந்த இன்னிங்ஸ்கள் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி உள்ளார். 1992இல் பெர்த்-இல் நடந்த போட்டியில் 114 ரன்கள் எடுத்தார். அப்போது அவர் சிறு வயது மேதையாக கருதப்பட்டார். சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கினார். சிட்னியில் நடந்த போட்டியில் 241 ரன்கள் விளாசினார்.
இருப்பினும், அடிலெய்டில் விளையாடிய இன்னிங்ஸ் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடுமையான சூழலில் விளையாடுவது மற்றும் ஆடுகளத்தை நன்கு உணர்ந்து அதற்கு ஏற்றவாறு ஆடுவது போன்ற சிறப்பம்சங்களை சச்சின் டெண்டுல்கர் பெற்றிருந்தார்.
சச்சின் டெண்டுல்கருக்கு அது 19வது சர்வதேச கிரிக்கெட் ஆண்டாகும். இருப்பினும், அந்த போட்டியில் ஒரு இளம் வீரரின் ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற அந்தத் துடிப்பு சச்சின் இடத்திலும் காணப்பட்டது. எதிரணியுடன் சிறிதும் அயராது போராடும் குணம் சச்சின் இடத்தில் இருந்தது. இவையே ஒரு சிறந்த வீரரின் முத்திரையாக பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டி நடந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் சச்சின் டெண்டுல்கரின் அந்த இன்னிங்ஸ்(153 ரன்கள்) இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றிருக்கிறது. இதுபோன்ற நீங்கா நினைவுகளை சச்சின் போன்ற வீரரால் மட்டுமே அளிக்க முடியும். இதனால்தான் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் போற்றப்படுகிறார். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ரசிகர்கள் மனதில் இன்னும் நீங்காது இடம் பெற்றிருக்கிறார்.